ஹோம் /நியூஸ் /சேலம் /

கிளியூர் நீர்வீழ்ச்சி.. படகு சவாரி.. ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கிளியூர் நீர்வீழ்ச்சி.. படகு சவாரி.. ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காடு படகு இல்லம்

ஏற்காடு படகு இல்லம்

Salem News : ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான  சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு விடுமுறை தினம் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில்  சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், இன்று மழை பெய்யவில்லை. விடுமுறை தினமான  இன்று  ஏற்கட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகள் ஏற்காடு அண்ணா பூங்கா ,லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோயில், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

மேலும் ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லக்கூடிய படகு  இல்லத்தில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய பயண சீட்டு வாங்கும் இடத்தில் நீண்ட வரிசையில் நின்று பயணச்சீட்டு வாங்கி  படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: Salem