ஹோம் /நியூஸ் /சேலம் /

மேட்டூர் காவிரி ஆற்றில் டன் கணக்கில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்.. பொதுமக்கள் அச்சம்...

மேட்டூர் காவிரி ஆற்றில் டன் கணக்கில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்.. பொதுமக்கள் அச்சம்...

இறந்து மிதக்கும் மீன்கள்

இறந்து மிதக்கும் மீன்கள்

நீர் மாதிரியை சேகரித்து மீன்கள் இறப்புக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என பொது மக்கள் கேட்டுக் கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் 2016 மீனவர்கள் உரிமம் பெற்று மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 45 லட்சம் மீன் குஞ்சுகள் மேட்டூர் அணையில் விடப்பட்டு வளர்க்கப்படுகிறது. இந்த மீன்களை  உரிமம் பெற்ற மீனவர்களை கொண்டு பிடிக்கப்பட்டு மேட்டூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக காவிரி ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கி காணப்படுவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் தங்கமாபுரிபட்டணம், மாதையன் குட்டை, நாட்டாமங்கலம், காவேரி கிராஸ் ஆகிய நீர் தேக்க பகுதிகளில் கரையின் இருபுறங்களிலும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. தண்ணீர் மாசடைந்து காணப்படுவதால் இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிய வருகின்றனர்.

Also see... கோவையில் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி கட்டிடம்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறந்து போன மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் நீர் மாதிரியை  சேகரித்து மீன்கள் இறப்புக்கான காரணத்தையும் கண்டறிய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Cauvery River, Fish, Salem