ஹோம் /நியூஸ் /சேலம் /

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலம்... சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்!

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலம்... சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்!

குப்பையில் கிடத்த பிறந்த குழதை சடலம்!

குப்பையில் கிடத்த பிறந்த குழதை சடலம்!

Salem | சேலத்தில் குப்பைத் தொட்டியில் கிடந்த சிசுவின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Salem, India

  சேலம்  நெத்திமேடு அருகே உள்ள குப்தா மெஷின் ரோடு பகுதியில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளங்குழந்தை குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுள்ளது. இன்று காலை வழக்கம் போல் குப்பை அள்ள வந்த மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் குழந்தையின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக, இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

  இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சேலம் மாநகர துணை ஆணையாளர் லாவண்யா நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை என்பதால் இனத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.

  Also see... வேலூரில் தெருக்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்

  தொடர்ந்து குழந்தையின் சடலத்தை மீட்ட அன்னதானப்பட்டி போலீசார் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை வீசி சென்ற நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  செய்தியாளர்: திருமலை தமிழ்மணி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Crime News, New born baby, Salem