Home /News /salem /

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.25 லட்சம் கன அடியாக அதிகரிப்பு.. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.25 லட்சம் கன அடியாக அதிகரிப்பு.. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மேட்டூர் அணை

மேட்டூர் அணை

Mettur | அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் காவிரிக் கரையோரம் , தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mettur, India
    கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 55,000 கன அடி வீதமாக இருந்து வந்தது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு 90,000 கனஅடியாகவும் , மாலை 6.30 மணிக்கு 1.10 லட்சம் கனஅடியாகவும், இரவு 10:00. மணிக்கு 1.25 லட்சம் கன அடியாகவும் அதிகரித்துள்ளது.

    இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது . அணையில் இருந்து விநாடிக்கு 1.25 லட்சம் கன அடி வீதம் நீர் திறந்து விடப்படுகிறது . அணை மின் நிலையம் , சுரங்க மின் நிலையங்கள் வழியாக 23 000 கன அடி நீரும் , உபரிநீர்ப் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 1.02 லட்சம் கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது. அணையிலிருந்து கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 400 வீதம் தண்ணீர் கனஅடி திறந்துவிடப்படுகிறது . அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது .

    Also see... கள்ளக்குறிச்சி மாணவியின் ஆவி.. வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் யூ டியூப் சேனல்கள்

    அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் காவிரிக் கரையோரம் , தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் , அவர்களின் உயிர் , உடைமைகளின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கை மேற்கொள்ளுமாறும் காவிரி டெல்டா பகுதி மாவட்ட ஆட்சியர்களுக்கு மேட்டூர் அணை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Cauvery water, Mettur, Salem, Water Levels Of Dams

    அடுத்த செய்தி