ஹோம் /நியூஸ் /சேலம் /

60 வயது மூதாட்டியை சோளக்காட்டில் வைத்து பலாத்கார முயற்சி : அலறல் சத்தத்தால் சிக்கிய 22 வயது வாலிபர்! 

60 வயது மூதாட்டியை சோளக்காட்டில் வைத்து பலாத்கார முயற்சி : அலறல் சத்தத்தால் சிக்கிய 22 வயது வாலிபர்! 

மூதாட்டி பலாத்கார வழக்கில் கைதான ஸ்ரீதர்

மூதாட்டி பலாத்கார வழக்கில் கைதான ஸ்ரீதர்

Salem District News | மூதாட்டியை குண்டுக்கட்டாக  தூக்கிச்சென்று அருகில் உள்ள  சோள தோட்டத்தில் வைத்து  பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Salem, India

  சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே பகடப்பாடி பகுதியை  சேர்ந்த 60 வயது மூதாட்டி தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக புளியங்குறிச்சி சாலையில்  நடந்து  சென்று கொண்டிருந்தார்.

  அப்போது அதே பகுதியை சேர்ந்த  ராமமூர்த்தி மகன் ஸ்ரீதர்(22 ), மூதாட்டியை குண்டுக்கட்டாக  தூக்கிச்சென்று அருகில் உள்ள சோள தோட்டத்தில் வைத்து  பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

  இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி உதவி கேட்டு சத்தம்  போட்டுள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள்  ஓடி  வந்துள்ளனர். ஆட்கள் வருவதை அறிந்த ஸ்ரீதர் அங்கிருந்து  தப்பியோடி விட்டார். பின்னர் மூதாட்டியை மீட்ட அப்பகுதி மக்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  அனுப்பி  வைத்தனர்.

  இதனையடுத்து ஜெயலட்சுமி ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்ரீதரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

  இதையும் படிங்க : தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கப்போகும் மிக கனமழை : வானிலை மையம் அலெர்ட்

  விசாரணையில் ஸ்ரீதர் தலைவாசல் அருகே  உள்ள  தனியார்  கல்லூரியில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தற்போது  நெல் அறுவடை இயந்திரத்தில் டிரைவராக வேலை செய்து வருவதாகவும், சம்பவத்தன்று மூதாட்டியை  தூக்கிச்  சென்று வாலிபர் பலாத்காரம் செய்ய முயன்றதும் தெரியவந்தது.

  இதனையடுத்து ஸ்ரீதர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 22 வயது வாலிபர் 60 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் வீரகனூர் பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Salem