ஹோம் /நியூஸ் /சேலம் /

டபுள் மீனிங் பேச்சு.. பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

டபுள் மீனிங் பேச்சு.. பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுததால், மாணவியின் பெற்றோர் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டையில் அரசு மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில்  பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்த மாரிமுத்து என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆசிரியர் மாரிமுத்து கடந்த வாரம் அந்தப்பள்ளியில் பயின்று வரும் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதனைமாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.  மாணவி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது  பெற்றோர் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் அதிகாரிகளுக்கு இச்சம்பவம் தொடர்பாக புகார் தெரிவித்தனர்.

Also Read : அழுகிய நிலையில் மிதந்த பெண் சடலம்.. உடுமலை அருகே அதிர்ச்சி!

இந்த புகாரின் பேரில் குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஜெயந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆசிரியர் மாரிமுத்து மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் தொந்தரவு செய்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஆசிரியர் மாரிமுத்துவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டார். இதனிடையே ஆசிரியர் மாரிமுத்துவிற்கு அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர் உடந்தையாக செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனால் அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் பெண் பட்டதாரி ஆசிரியர் உள்பட மேலும் சிலர் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Raj Kumar
First published:

Tags: School Teacher, Sexual harassment, Sexually harrassed, Teacher