ஹோம் /நியூஸ் /சேலம் /

மாணவிகளிடம் மட்டும் கூடுதல் நெருக்கம்... 9ம் வகுப்பு மாணவிக்கு பள்ளியில் வைத்தே பாலியல் தொல்லை- கணித ஆசிரியர் கைது

மாணவிகளிடம் மட்டும் கூடுதல் நெருக்கம்... 9ம் வகுப்பு மாணவிக்கு பள்ளியில் வைத்தே பாலியல் தொல்லை- கணித ஆசிரியர் கைது

ஆசிரியர் கைது

ஆசிரியர் கைது

மாணவி ஆய்வு கூடத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது உள்ளே சென்ற கணித ஆசிரியர் சரவணகுமார், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Omalur | Salem

ஓமலூர் அருகே பள்ளி மாணவிக்கு  ஆய்வு கூடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள ஜலகண்டாபுரம் காவல் நிலைய எல்லையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சவுரியூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சரவணகுமார்(42), கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு தான் இந்த பள்ளியில் ஆசிரியராக சேர்ந்துள்ளார். இவர் மாணவர்களை விட மாணவிகளிடமே அதிகம் பேசி நெருக்கம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஒருசில மாணவிகளை மட்டும் அவ்வப்போது தனியாக அழைத்து பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை அடிக்கடி தனியாக அழைத்து பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று அதே மாணவியை அழைத்த ஆசிரியர் சரவணகுமார், பள்ளியில் உள்ள ஹைடெக் ஆய்வு கூடத்தில் வேலை கொடுத்து செய்யுமாறு கூறியுள்ளார். மாணவி ஆய்வு கூடத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது உள்ளே சென்ற கணித ஆசிரியர் சரவணகுமார், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.

இதையும் படிங்க | மர்ம சூட்கேஸில் பெண்ணின் நிர்வாண உடல்.. காட்டிக்கொடுத்த ஆட்டோக்காரர் - அம்பலமான கணவனின் சதி

இதனால் அச்சமடைந்த மாணவி, பெற்றோரிடம் நடந்ததை கூறியதையடுத்து, அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியர் சரவணகுமாரை கைது செய்தனர்.

இதையடுத்து,  மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டபோது, ஆசிரியர் சரவணக்குமார் பொய் வழக்கில் கைது செய்துவிட்டதாக முழக்கமிட்டுள்ளார். தொடர்ந்து  சரவணக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர்  சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Child Abuse, Crime News, Sexual harrasment, Teacher