ஹோம் /நியூஸ் /சேலம் /

தூங்கிகொண்டிருந்த மனைவி நள்ளிரவில் கொலை... மாயமான கணவரை தேடும் போலீசார்..

தூங்கிகொண்டிருந்த மனைவி நள்ளிரவில் கொலை... மாயமான கணவரை தேடும் போலீசார்..

கணவன் ராஜசேகரன் மனைவி கார்த்திகைசெல்வி

கணவன் ராஜசேகரன் மனைவி கார்த்திகைசெல்வி

வீட்டின் அருகில் இருந்த உறவினர்கள் சிறுமி அழும் சத்தம்கேட்டு வந்து வீட்டில் பார்த்தபோது கார்த்திகைசெல்வி சடலமாக கிடந்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Salem, India

  சேலம் சீலநாயக்கன்பட்டி வேல் நகர் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் ராஜசேகரன் (வயது 42).  இவரது மனைவி கார்த்திகைசெல்வி (வயது 35). இவர்களுக்கு சக்தி என்ற மகள் (வயது10) உள்ளார். ராஜசேகரன் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். கார்த்திகைசெல்வி வீட்டிலேயே டெய்லர் வேலை செய்து வந்தார்.

  இந்த நிலையில் நேற்று இரவு குடும்பத்துடன் அனைவரும் வீட்டில் உறங்க சென்றுள்ளனர். பின்னர் அதிகாலையில் மகள் சக்தி கண் விழிந்து எழுந்து பார்த்தபோது தாய்  உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறியழுதுள்ளார். வீட்டின் அருகில் இருந்த உறவினர்கள் சிறுமி அழும் சத்தம்கேட்டு வந்து வீட்டில் பார்த்தபோது கார்த்திகைசெல்வி சடலமாக கிடந்துள்ளார். கணவர் ராஜசேகரன் காணாமல் போயிருந்தார்.

  இதுதொடர்பாக அன்னதானப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கார்த்திகைசெல்வியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

  Read More : சிறுவனுடன் காதல்.. திருமணம்.. 3 மாத கர்ப்பிணி 'கல்லூரி மாணவி' போக்சோவில் கைது

  மேலும் மாயமான கணவர் ராஜசேகரனை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  உறவினர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியை கொலை செய்து ராஜசேகரன் தலைமறைவானாரா?  அல்லது வேறு யாரேனும் கார்த்திகைசெல்வியை கொலை செய்துவிட்டு ராஜசேகரனை கடத்தி சென்றுவிட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.  ராஜசேகரனை கண்டுபிடித்தால் தான் உண்மை தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Crime News, Murder, Salem