ஹோம் /நியூஸ் /சேலம் /

சாலையில் சென்ற லாரியில் திடீர் தீ - நல்வாய்ப்பாக உயிர் தப்பிய டிரைவர்!

சாலையில் சென்ற லாரியில் திடீர் தீ - நல்வாய்ப்பாக உயிர் தப்பிய டிரைவர்!

தீ விபத்து - சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை

தீ விபத்து - சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலை

சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் பார்சல் லாரி எஞ்சின் திடிரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் பார்சல் லாரியில், மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக எஞ்சின் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

லாரி எஞ்சினில் புகை வருவதையறிந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த லாரியின் ஓட்டுநர் சுரேஷ் பாபு லாவகமாக லாரியை சாலையோரத்தில் நிறுத்தியுள்ளார். இதனால் லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இதனையடுத்து லாரி ஓட்டுனர் வாழப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள் அப்பகுதியில் பெய்து வந்த கனமழை காரணமாக லாரியில் கொளுந்து விட்டு எரிந்த தீ மழையில் தானாகவே அணைந்தது.

Also see... தஞ்சையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணப்புத்துறையினர் கன்டெய்னர் லாரியில் இருந்த பொருட்களை மீட்டனர். இந்த தீவிபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Fire accident, National, Salem