ஹோம் /நியூஸ் /சேலம் /

மருத்துவரிடமே ரூ.80 லட்சத்தை சுருட்டிய கில்லாடிகள்.. இரட்டிப்பு லாபத்தை நம்பி ஏமாந்த பரிதாபம்

மருத்துவரிடமே ரூ.80 லட்சத்தை சுருட்டிய கில்லாடிகள்.. இரட்டிப்பு லாபத்தை நம்பி ஏமாந்த பரிதாபம்

பண மோசடி

பண மோசடி

Crime News: வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டு பண மோசடிக்கு உடந்தையாக இருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem | Salem

சேலம் அருகே பங்கு சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி மருத்துவரிடம் 80 லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியை  சேர்ந்தவர் கிருபாகரன்(40). மருத்துவரான இவரின் செல்போன் வாட்ஸ் அப்பிற்கு கடந்த ஜனவரி மாதம் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் என தகவல் வந்துள்ளது. இதனை நம்பிய இவர் பல்வேறு தவணைகளில் 80 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். முதற்கட்டமாக முதலீடு செய்த போது 1,90,000 ரூபாய் வரை லாபம் பெற்றுள்ளார். பின்னர்  அவருக்கு  பணம் எதுவும் வரவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிருபாகரன், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவின் பேரில் சேலம் மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளர் கைலாசம் தலைமையிலான தனிப்படையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த விசாரணையில், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெற்று தருவதாகக் கூறி ரூபாய் 80 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. நாடு முழுவதும் உள்ள 15 பேரின் வங்கி கணக்குகளில் இந்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.  மேலும் பண மோசடி செய்வதற்காக தங்களின் வங்கி கணக்குகளை வாடைக்கு விட்ட நபர்கள் குறித்தும் தெரியவந்தது. வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டு பண மோசடிக்கு உடந்தையாக இருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

ALSO READ | டாஸ்மாக் கடையை மூட ஊழியர்களின் காலில் விழுந்த எம்.எல்.ஏ.. வைரலாகும் வீடியோ

கேரள மாநிலத்தை  சேர்ந்த சைதலவி கூட்டலுங்கல் (50) என்பவர் வங்கி கணக்கில் ரூ.38 லட்சம் பணம் பரிமாற்றம் செய்தது தெரியவந்தது.  அதேபோல டெல்லியைச் சேர்ந்த சவுரவ் தாக்கூர் (23) ரூ. 5 லட்சம் பணம் பரிமாற்றம் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கைதான  சைதலவவி கூட்டலுங்கல் மீது ஆந்திரம், குஜராத் போன்ற மாநிலங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது.

Published by:Anupriyam K
First published:

Tags: Arrest, Cheating, Crime News, Money Laundering, Salem