Home /News /salem /

அப்பா முன்னாடிதான் என் கல்யாணம்.. மறைந்த தந்தையின் மெழுகுசிலை முன்பு நடந்த மகனின் திருமணம்..

அப்பா முன்னாடிதான் என் கல்யாணம்.. மறைந்த தந்தையின் மெழுகுசிலை முன்பு நடந்த மகனின் திருமணம்..

தந்தையின் மெழுகுசிலையின் முன்பு நடந்த மகனின் திருமணம்...

தந்தையின் மெழுகுசிலையின் முன்பு நடந்த மகனின் திருமணம்...

Salem | தந்தையின் மெழுகுசிலை முன்பாக திருமணம் செய்து கொண்ட மகன் சேலத்தில் நெகழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India
    சேலம் குகை பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம், புஷ்பராணி தம்பதியருக்கு ஆரோக்கிய இயேசுராஜா என்ற மகனும்,ராசிகா என்ற மகளும் உள்ளனர்.இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனவால் பாதிக்கப்பட்டு பன்னீர்செல்வம் உயிரிழந்தார். இவர் இறப்பதற்கு முன்பாகவே மகள் ராசிகாவுக்கு திருமணம் முடித்துவிட்ட நிலையில் மகனுக்கு விமர்சியாக திருமணம் நடத்த வேண்டும் என்ற ஆசையுடன் அதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளார்.

    இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி உயிரிழந்தார். தந்தை முன்னிலையில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக பெங்களூரில் மெழுகுசிலை தயாரிக்கும் நிறுவனத்தில் தந்தையின் உருவ மெழுகுசிலையை தயாரித்து திருமண விழாவில் தந்தை முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

    Also see... டோலுக்கு எப்படி பணம் எடுக்கலாம்..? ராகுல்காந்தி நடைபயணத்திற்கு சென்ற காங்கிரஸ்காரர்கள் சுங்கச்சாவடியில் வாக்குவாதம்

    உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் தந்தையின் மீது வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக தந்தையின் மெழுகு சிலையை தயாரித்து தந்தையின் முன்பு திருமணம் செய்து கொண்ட மகனை நினைத்து வியப்பில் ஆழ்ந்தனர்.

    செய்தியாளர்: திருமலை தமிழ்மணி, சேலம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Father, Marriage, Salem, Wax, Wax statue

    அடுத்த செய்தி