Home /News /salem /

உணவக உரிமையாளரை தாக்கிய பெண் கவுன்சிலர் மகன்... ‘பயமாக இருக்கிறது...’ - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ

உணவக உரிமையாளரை தாக்கிய பெண் கவுன்சிலர் மகன்... ‘பயமாக இருக்கிறது...’ - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ

உணவக உரிமையாளர் மீது தாக்குதல்

உணவக உரிமையாளர் மீது தாக்குதல்

Salem : சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உணவக உரிமையாளரை கவுன்சிலர் மகன் தாக்கியதில், கண் மற்றும் நுரையீரல் பகுதியில் அடி விழுந்த நிலையில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் சேலத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உணவக உரிமையாளரை கவுன்சிலர் மகன் தாக்கிய நிலையில்,  தொடர்ந்து உணவகம் நடத்த பயமாக இருப்பதாகவும், தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாதிக்கப்பட்டவர் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் கோனகாப்பாடி ஊராட்சி, அத்திகட்டானூர் பகுதியை சேர்ந்த  வேலுச்சாமி மகன் செந்தில்குமார் (வயது 26). இவர் தாரமங்கலம் - சேலம் பிரதான சாலையில், ஜோதி மேல்நிலை பள்ளி அருகில்,  கடந்த 6 மாதங்களாக எஸ்.பி.குமரன் என்ற பெயரில்  உணவகம் நடத்தி  வருகிறார்.

இந்நிலையில், தாரமங்கலம் டீச்சர்ஸ் காலனி பகுதியில் வசிப்பவரும், தாரமங்கலம் நகராட்சி 6 வது வார்டு பெண் கவுன்சிலர் (சுயேட்சை) செல்வி என்பவரின் மகனுமான அரவிந்த் என்பவர் கடந்த செவ்வாய்கிழமை (7ஆம் தேதி) இந்த கடைக்கு  சாப்பிட வந்துள்ளார். அப்போது அவர் ஆம்லட் வேண்டும் என ஆர்டர் கொடுத்துள்ளார். அப்போது ஏற்கனவே தயார் நிலையில் இருந்த, சூடு இல்லாத (ஆறிபோன) ஆம்லட் ஒன்றை செந்தில்குமார் கொடுத்ததாகவும்,  இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதனை அடுத்து இனி எப்படி கடை நடத்தி விடுவாய் என்று பார்க்கலாம் என்று செந்தில்குமாரை மிரட்டியதோடு, தொலைபேசி மூலமாக தனது நண்பர்கள் 3 பேரை வரவழைத்த அரவிந்த், அவர்களுடன் சேர்ந்து, கடை உரிமையாளர் செந்தில்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். செந்தில் குமாரின் கண் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக தாரமங்கலம் காவல் நிலையத்தில் அரவிந்த் மற்றும் அடையாளம் தெரியாத மூன்று பேர் மீது, மூன்று பிரிவுகளில் (294-b, 323, 506-i) வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அரவிந்தை தேடி வருகின்றனர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில்குமார் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், நான் 6 மாதங்களாக தாரமங்கலத்தில் ஹோட்டல் கடை நடத்தி வருகிறேன், கடந்த திங்கட்கிழமை (6ஆம் தேதி) ஒருவர் தனது ஹோட்டல் கடைக்கு வந்து அது சரியில்லை, இது சரியில்லை எனக் கூறிவிட்டு, அப்போது சாப்பிட்டதற்கு காசு கொடுத்து சென்றார். அடுத்து நாள் அவர் மதுபோதையில் வந்து தகாத வார்த்தைகளால் திட்டி, கடை நடத்திடுவியா என மிரட்டி, நான்கு ஐந்து பேரை கூட்டிட்டு வந்து, என்னை அடிச்சிட்டு போய்ட்டாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில், கண் மற்றும் நுரையீரல் பகுதி அதிகமாக அடி விழுந்து, மூச்சு விட சிரமமாக உள்ளது. இது குறித்து தாரமங்கலம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளேன். ஆனால் ஆளுங்கட்சி சப்போர்ட் இருப்பதாலும், கவுன்சிலர் மகன் என்பதாலும்,  சம்பவம் நடந்து ஏழு நாட்கள் ஆகியும் காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Must Read : மதுபோதையில் தகராறு... பாலியல் தொல்லை - கணவன் முகத்தில் கொதிக்கும் ரசத்தை ஊற்றிய மனைவி

நான் தொடர்ந்து அங்கு கடை நடத்த கூடாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் எனக்கு பயமாக இருக்கிறது. காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து நான் தொடர்ந்து தொழில் செய்ய உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.
Published by:Suresh V
First published:

Tags: Attack, Hotel, Salem, Video

அடுத்த செய்தி