ஹோம் /நியூஸ் /சேலம் /

பச்சிளம் குழந்தைக்கு ரூ.3 லட்சம் பேரம்.. சேலத்தில் சிக்கிய இடைத்தரகர்கள் - நடந்தது என்ன?

பச்சிளம் குழந்தைக்கு ரூ.3 லட்சம் பேரம்.. சேலத்தில் சிக்கிய இடைத்தரகர்கள் - நடந்தது என்ன?

குழந்தையை விற்க முயன்றவர்கள் கைது

குழந்தையை விற்க முயன்றவர்கள் கைது

Crime News | சேலத்தில் சட்ட விரோதமாக குழந்தையை விற்பனை செய்ய எடுத்து வந்த, இடைத்தரகர்கள் இருவர் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலத்தில் பிறந்து நான்கு நாள்களே பச்சிளங் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. பச்சிளங் குழந்தையை ரூ.3,00,000 லட்சத்துக்கு பேரம் பேசி விற்பனை செய்ய இளம்பெண்ணின் உறவினரான வளர்மதி என்ற என்பவர் குழந்தையை சேலத்துக்கு எடுத்து வந்துள்ளார்.

வளர்மதியிடம் இருந்து குழந்தையை வாங்குவதற்காக ஈரோட்டை சேர்ந்த இடைத்தரகர்களான லதா மற்றும் அவரது கணவர் மதியழகன் ஆகியோர் சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதிக்கு வந்துள்ளனர். பச்சிளங் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக சேலம் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து மப்டியில் போலீஸார் அந்தப்பகுதியில் கண்காணித்து வந்தனர்.

இதையும் படிங்க : ''10 முறை கொலை முயற்சி.. காய்ச்சல் மாத்திரையை கலந்தேன்''.. ஜூஸில் விஷம் கலந்த விவகாரத்தில் காதலி அதிர்ச்சி வாக்குமூலம்!

சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதிக்கு வந்த வளர்மதியிடம் இருந்து  குழந்தையை வாங்கி செல்வதற்காக  இடைத்தரகர்களான லதா மற்றும் அவரது கணவர் இருவரும் குழந்தையை பெற முயற்சி செய்யும்போது கையும் களவுமாக மூவரையும் போலீசார் பிடித்தனர்.  பின்னர் அவர்களிடமிருந்து பிறந்த நான்கு நாட்களான பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கிருந்து குழந்தைகள் நல காப்பகத்திற்கு குழந்தை பாதுகாப்பாக கொடுத்து அனுப்பப்பட்டது.

Also see... தென்காசியில் 97 வயது மூதாட்டிக்கு சிறிய துளை மூலம் நவீன சிகிச்சை...

பின்னர் சட்டவிரோதமாக குழந்தையை கடத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து மூவரையும் நீதிமன்ற காவலில் அடைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

லதா மற்றும் அவரது கணவர் இருவரும் தொடர்ந்து குழந்தைகளை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்பொழுது மூவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Baby Sale, Child, Crime News, Salem