ஹோம் /நியூஸ் /சேலம் /

சேலத்தில் களைக்கட்டிய கலைத்திருவிழா.. கிராமிய நடனத்தில் அசத்திய மாணவிகள்

சேலத்தில் களைக்கட்டிய கலைத்திருவிழா.. கிராமிய நடனத்தில் அசத்திய மாணவிகள்

சேலம் கலை திருவிழா

சேலம் கலை திருவிழா

Salem News : சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் மாணவர்கள் கிராமிய கலைகளின் நடனங்களை ஆடி அசத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

கல்வி கற்றல் என்கிற நிலையைத் தாண்டி மாணவ மாணவிகளிடம் புதைந்து கிடக்கும் கலைத்திறன், படைப்பாற்றலை வெளிக்கொணர  கல்வித் துறையின் ‘கலைத் திருவிழா’ தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

6 முதல் 12-ம் வகுப்பு படித்து வரும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கலைத் திருவிழா தற்போது களைகட்ட தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சேலம் மரவனேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்கள்  கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன், நுண் கலை,  உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

Also Read:  22 வகையான நாட்டுப்புற திருவிழாக்களை தொடங்க இருக்கும் ராஜஸ்தான் சுற்றுலாத் துறை!

இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக சேலம் ஓமலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தொன்னம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் கிராமிய கலைகளின் நடனங்களை ஆடி  அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். இன்று தொடங்கிய இந்த போட்டிகள் வரும் 10 ஆம் தேதி  வரை நடைபெற உள்ளது.

செய்தியாளர் : திருமலை தமிழ்மணி ( சேலம்)

First published:

Tags: Dance, Local News, Salem, Tamil News