Home /News /salem /

16 கி.மீ.. காரை ரிவர்ஸில் இயக்கி சேலம் இளைஞர் சாதனை..

16 கி.மீ.. காரை ரிவர்ஸில் இயக்கி சேலம் இளைஞர் சாதனை..

car driving

car driving

Salem | எடப்பாடி அருகே 16 கிலோமீட்டர் தூரம் காரை பின்னோக்கி ஓட்டி இளைஞர் சாதனை படைத்து, கேரள இளைஞரின் சாதனையை முறியடித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜலகண்டாபுரம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்தவர் நெசவுத்தொழிலாயான பூபதி. இவரது மகன் சந்திரமவுளி (வயது 35). சிறு வயது முதலே கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட சந்திரமவுலி சாலை பாதுகாப்பினை வலியுறுத்தி புதியதொரு சாதனை செய்ய முயற்சித்து வந்தார்.

இந்நிலையில் எடப்பாடி புறவழிச்சாலையில் இன்று நடைபெற்ற நிகழ்வில், 16 கிலோமீட்டர் 140 மீட்டர் தூரத்தினை 29 நிமிடம் 10 வினாடிகளில் தனது காரை அங்கீகரிக்கப்பட்ட நடுவர் வழக்கறிஞர் குமார் முன்னிலையில், பின்னோக்கி ஓட்டி சாதனை நிகழ்த்திக்காட்டினார்.

ஏற்கனவே கேரள மாநிலம், பந்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த டேசன் தாமஸ் என்பவர் 30 நிமிடங்களில் 14 கிலோமீட்டர் தூரத்தினை காரில் பின்னோக்கி ஓட்டிய சாதனையை முறியடித்து சந்திரமவுளி புதிய சாதனை படைத்துள்ளார். புதிய சாதனை புரிந்த இளைஞர் சந்திர மௌலியை திமுக மாவட்ட செயலாளர் டி. எம். செல்வகணபதி எடப்பாடி நகர மன்ற தலைவர் டி.எஸ்.எம் பாஷா, நங்கவள்ளி திமுக ஒன்றிய செயலாளர் சின்னு (எ) அர்த்தனாரீஸ்வரன், அவைத் தலைவர் ராஜு, சேட்டு, எடப்பாடி காவல் உதவி ஆய்வாளர் சிவசங்கரன் உள்ளிட்டோர் வாழ்த்தி, பாராட்டினர்.

இது குறித்து சாதனை இளைஞர் சந்திர மௌலி செய்தியாளர்களிடம் கூறும் போது, சாலைப் பாதுகாப்பினை வலியுறுத்தி இந்த சாதனை நிகழ்வை மேற்கொண்டதாகவும், இளைஞர்கள் சாலைகள் மற்றும் பொதுவெளிகளில் இருசக்கர வாகனம் மற்றும் கார்களை கொண்டு சாகச நிகழ்ச்சியில் ஈடுபட கூடாது எனவும், கட்டாயம் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என இந்த சாதனை நிகழ்வின் மூலம் கேட்டுக் கொள்வதாக கூறினார்.

Also see...தேனியில் 51 அரசுப் பள்ளிகளில் இனி காலை உணவு

சாதனை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஜலகண்டாபுரம் ஓம் முருகா நண்பர்கள் குழுவினர் மற்றும் ஐயப்பா சேவா சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Car, Kerala, Salem

அடுத்த செய்தி