ஹோம் /நியூஸ் /சேலம் /

WATCH -14 மணி நேரம்.. ராஜராஜசோழன் உருவத்தை டாட்டூவாக குத்திக்கொண்ட சேலம் இளைஞர்!

WATCH -14 மணி நேரம்.. ராஜராஜசோழன் உருவத்தை டாட்டூவாக குத்திக்கொண்ட சேலம் இளைஞர்!

ராஜராஜசோழன் உருவத்தை டாட்டூவாக குத்திக்கொண்ட சேலம் இளைஞர்

ராஜராஜசோழன் உருவத்தை டாட்டூவாக குத்திக்கொண்ட சேலம் இளைஞர்

Salem News | காலை 10 மணிக்கு டாட்டூ குத்த தொடங்கி இரவு 12 மணி வரை சுமார் 14 மணி நேரம்  செலவழித்து டாட்டூ குத்தி கொண்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Salem, India

  சேலத்தில் ராஜராஜசோழன் மற்றும் தஞ்சை பெரிய கோயில் கோபுரம்  உள்ளிட்ட உருவப்படத்தை தனது முதுகில் டாட்டூவாக இளைஞர் ஒருவர் குத்திக்கொண்டுள்ளார்.

  சேலம் மாநகர் மரவனேரி அடுத்த ஐஸ்வர்யம் கார்டன் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து வரலாற்று புத்தகங்கள் மற்றும் தஞ்சை சென்று அவர் கட்டிய தஞ்சை பெரியகோயில் மற்றும் பொன்னியின் செல்வன் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பார்த்தும், படித்தும் ராஜராஜ சோழன் மீது ஜெயப்பிரகாஷுக்கு  ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

  இதையும் படிங்க : WATCH - தென்காசியில் பைக்கை வழிமறித்து 3 பேரை கடித்துக் குதறிய கரடி..! ஷாக் வீடியோ!

  இந்நிலையில், கடந்த 3ம் தேதி ராஜராஜ சோழனின் 1037வது பிறந்த நாளை முன்னிட்டு அந்நாளில் அவருடைய முழு உருவம் மற்றும் அவர் கட்டிய தஞ்சை கோபுரத்தை தன் உடம்பில் டாட்டூவாக வரைய முடிவெடுத்து, 200 இன்ச்  அளவில்  தஞ்சை கோபுரம் மற்றும் ராஜராஜ சோழன் கம்பீரமாக நிற்கும் தோரணையுடன் இருக்கும் உருவத்தை தன் உடம்பில் குத்தியுள்ளார்.

  ' isDesktop="true" id="831872" youtubeid="mJomrd-tTUA" category="salem">

  காலை 10 மணிக்கு டாட்டூ குத்த தொடங்கி இரவு 12 மணி வரை சுமார் 14 மணி நேரம்  செலவழித்து டாட்டூ குத்தி கொண்டுள்ளார். இதனை அவருடைய நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.

  செய்தியாளர் : திருமலை தமிழ்மணி

  Published by:Karthi K
  First published:

  Tags: Salem