ஹோம் /நியூஸ் /சேலம் /

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்... சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் அவதி!

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்... சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் அவதி!

சேலம் பனிமூட்டம்

சேலம் பனிமூட்டம்

Yercaud snow | விடுமுறை தினத்தை கொண்டாடலாம் என ஏற்காடு சென்றவர்கள் கடும் பனியால் சிரமத்திற்குள்ளாகினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem | Salem | Yercaud

சேலத்தில் ஏற்பட்டுள்ள கடும் பனிமூட்டத்தால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் பனி மூட்டமாக உள்ளது. இன்று அதிகாலை ஏற்காடு பேருந்து நிலையம் , லேடிஸ் சீட் , படகு இல்லம், ரவுண்டானா , அண்ணா பூங்கா உள்ளிட்ட  பகுதிகளில் கடும் பனி பெய்தது. சாலை தெரியாத அளவு பனிமூட்டம் இருந்தது. மலைப்பாதையிலும்  கடும் பனி பெய்தது.

இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எதிரில் வரும் வாகனங்களே தெரியாத நிலையில் பனி மூட்டமாக இருந்ததால்  பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளக்கை எரியச் செய்தபடி சென்று வந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஏற்காடு வந்துள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பனிமூட்டத்தால் சிரமத்திற்குள்ளாகினார்.

First published: