முகப்பு /செய்தி /சேலம் / திருட சென்ற வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல் : வசமாக சிக்கிய திருடனுக்கு பொதுமக்கள் தர்ம அடி!

திருட சென்ற வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல் : வசமாக சிக்கிய திருடனுக்கு பொதுமக்கள் தர்ம அடி!

பாலியல் தொல்லை கொடுத்த திருடன்

பாலியல் தொல்லை கொடுத்த திருடன்

Salem Thefter Try to Harresment | பெண்ணின் சத்தம் கேட்டு திருடனை பிடித்து கட்டி வைத்து தர்ம அடி பொதுமக்கள் கொடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem, India

சேலத்தில் நள்ளிரவில் வீட்டில் திருட சென்ற திருடன் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் காட்டுக்கோட்டை பகுதியில் 40 வயதான பெண் வசித்து வந்துள்ளார். கடந்த 40 நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் அந்த பெண்ணின் இறந்துவிட்ட நிலையில் தனது இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் ஒன்றரை மணியளவில் விதவை பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த திருடன் வீட்டினுள் இருந்த நகை, பணம் மற்றும் செல்போனை திருடியுள்ளார்.

அப்போது வீட்டில் யாரும் இல்லாமல் தனியாக பெண் இருந்ததை அறிந்த திருடன் தூங்கி கொண்டிருந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.   பதறிப்போன அந்த பெண் சத்தம் போட்டு கூச்சலிட்ட நிலையில் அக்கம், பக்கத்தினர், விதவை பெண்ணின் வீட்டிற்கு சென்று திருடனை பிடித்து தர்ம அடி கொடுத்து கட்டுப்போட்டு விசாரித்துள்ளனர்.

அதில் திருடன் சிறுவாச்சூர் அருகே உள்ள இந்திலி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் முத்துக்கண்ணன்(57) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தலைவாசல் காவல்துறையினர் திருடன் முத்து கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் வீட்டில் திருட சென்ற போது தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் திருடன் பொதுமக்களிடம் வசமாக சிக்கி கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Local News, Salem