முகப்பு /செய்தி /சேலம் / ரூ.9 லட்சம் மதிப்பிலான மின் கம்பிகள் திருட்டு - மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி..!

ரூ.9 லட்சம் மதிப்பிலான மின் கம்பிகள் திருட்டு - மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி..!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

விசாரணையில் 4,000 கிலோ எடை கொண்ட மின்  கம்பிகளை  சேகோ ஆலையின் அருகே உள்ள சவுக்கு தோப்பு  வழியாக  மர்ம  நபர்கள்  திருடி சென்றது தெரிய வந்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem | Tamil Nadu

தலைவாசல் அருகே துணை மின் நிலையத்திற்கு சொந்தமான 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின் கம்பிகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல்  துணை  மின்  நிலையத்திற்கு  உட்பட்ட பகுதியில்  புதிய  மின்  பாதை  அமைக்கும்  பணிகள் நடைபெற்று வருகிறது, இதற்காக ஆறு  ரோல்  கொண்ட  மின் கம்பிகள்  சார்வாய் பகுதியில் உள்ள தனியார்  சேகோ  ஆலை  இடத்தில்  மின்வாரிய அதிகாரிகள் வைத்திருந்துள்ளனர் . இதில்  ஒன்பது  லட்சம் ரூபாய்  மதிப்பிலான  நான்கு  ரோல் மின் கம்பிகளை மர்ம  நபர்கள்  திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் தலைவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில் 4,000 கிலோ எடை கொண்ட மின்  கம்பிகளை  சேகோ ஆலையின் அருகே உள்ள சவுக்கு தோப்பு  வழியாக  மர்ம  நபர்கள்  திருடி சென்றது தெரிய வந்துள்ளது . இந்த திருட்டு சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Salem, Theft