முகப்பு /செய்தி /சேலம் / பூ கவரில் படமெடுத்த குட்டி நல்ல பாம்பு.. சேலம் பூ மார்க்கெட்டில் பதறிய மக்கள்!

பூ கவரில் படமெடுத்த குட்டி நல்ல பாம்பு.. சேலம் பூ மார்க்கெட்டில் பதறிய மக்கள்!

பூ கவரில் இருந்த குட்டி நல்ல பாம்பு

பூ கவரில் இருந்த குட்டி நல்ல பாம்பு

Salem Snake dance | காதலர் தினத்தையொட்டி மார்க்கெட்டிற்கு வந்த பூ கவரில் குட்டி நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem | Salem

சேலத்தில் உள்ள பூமார்க்கெட்டுக்கு எடுத்து வரப்பட்ட அரளிப்பூ பாக்கெட்டில் நல்ல பாம்பு குட்டி ஒன்று படமெடுத்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று மலர் சந்தையில் இருந்து பூக்கள் விற்பனை களைகட்டியது. அந்த வகையில் சேலம் மார்க்கெட்டிற்கு எடுத்து வரப்பட்ட அரளிப்பூ பாக்கெட்டில் நல்ல பாம்பு ஒன்று இருந்துள்ளது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், சாலையில் அந்த பூ பையை வைத்து குட்டி நல்ல பாம்பின் செயல்களை கவனித்தனர்.

அப்போது அந்த பாம்பு பூ கவரின் வெளியே திரண்டிருந்தவர்களை பார்த்து படமெடுத்து ஆடியது.இதனை கண்ட பொதுமக்கள் அச்சத்துடன் அதனை வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: King cobra, Local News, Salem, Snake, Viral Video