முகப்பு /செய்தி /சேலம் / முன்விரோதத்தால் பிரபல ரவுடியின் தலையை துண்டித்த கொடூரம்... சேலத்தில் பரபரப்பு!

முன்விரோதத்தால் பிரபல ரவுடியின் தலையை துண்டித்த கொடூரம்... சேலத்தில் பரபரப்பு!

பிரபல ரவுடி ஆனந்த்

பிரபல ரவுடி ஆனந்த்

Salem murder | முன்விரோதத்தால் பிரபல ரவுடியை ஓட ஓட விரட்டி தலையை துண்டித்த மர்மகும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem | Salem

சேலம் அருகே பிரபல ரவுடியான காட்டூர் ஆனந்த் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆனந்த் (44) மனைவி சத்யா மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வலசையூர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு 9 மணியளவில் பிராபாகரன் என்பவருடன் காட்டூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆனந்த் அங்கிருந்து 11 மணியளவில் வீட்டிற்கு புறப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது காட்டூர் மயானம் அருகே சென்று கொண்டிருந்தபோது, 6 பேர் கொண்ட கும்பல் ஆனந்தை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரவுடி ஆனந்த், அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடியுள்ளார். அப்போதும் அவரை விடாத அந்த கும்பல் ஓட ஓட விரட்டி ஆனந்தின் தலையை துண்டித்து கொலை செய்து விட்டு காரில் தப்பி சென்றுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஆனந்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த பிரபாகரனையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஆனந்த் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்மகும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

செய்தியாளர்: திருமலை, சேலம்.

First published:

Tags: Crime News, Local News, Murder, Salem