சேலம் மாவட்டம் எடப்பாடி எடப்பாடியிலிருந்து மேச்சேரி செல்லும் நெடுஞ்சாலையில் ஒட்டப்பட்டி என்ற பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 வயது சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 10 வயது சிறுவனும் அவனது தந்தை இருசக்கரவாகனத்தில் நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது முன்னாள் வேகமாக சென்றுக்கொண்டிருந்த மினிடெம்போ ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.
இதன்காரணமாக பின்னால் வந்த இருசக்கர வாகனம் டெம்போவின் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இருசக்கர வாகனம் வலதுபுறமாக சாலையில் சாயந்தது. இதில் பைக் ஓட்டிவந்தவரும் 10 வயது சிறுவன் சாலையில் விழுந்தனர்.அப்போது எதிரே வந்த மற்றொரு மினி டெம்போ 10 வயது சிறுவனின் மீது ஏறி சென்றது.
இந்த விபத்தில் சிறுவனின் வலது கை நசுங்கி பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அருகில் இருந்த வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: இன்ஸ்டாகிராம் காதல்.. பங்களா வீட்டில் குடித்தனம்.. பள்ளி மாணவியை கடத்தி சென்ற பைக் மெக்கானிக் கைது
இந்த விபத்து தொடர்பாக எடப்பாடி போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் விபத்துக்கு காரணமான டெம்போ ஓட்டுனரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CCTV Footage, Local News, Salem, Salem accident, Tamil News