முகப்பு /செய்தி /சேலம் / வேன் மோதியதில் 3மாத கர்ப்பிணி பலி - சேலத்தில் துயரம்

வேன் மோதியதில் 3மாத கர்ப்பிணி பலி - சேலத்தில் துயரம்

விபத்தில் உயிரிழந்த பெண்

விபத்தில் உயிரிழந்த பெண்

கெங்கவல்லி  அருகே  சாலையோரம்  நடந்து  சென்ற  கர்ப்பிணி பெண்  வேன்  மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம்  கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி  காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 27). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். இவர் அதேப்பகுதியை சேர்ந்த சினேகா (வயது 24) என்ற பெண்ணை காதலித்து கடந்த ஓராண்டுக்கு  முன்பு திருமணம் செய்துக்கொண்டார். சினேகா 3 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சினேகா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு தனது இல்லத்துக்கு ஆணையம்பட்டியில் இருந்து தெடாவூர் செல்லும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது வீரகனூரில் இருந்து கெங்கவல்லி நோக்கி பால் பாக்கெட்டுகளை ஏற்றிச்சென்ற வேன் சினேகாவின் பின்பக்கம் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானதில் பத்தடி தூரத்திற்கு கர்ப்பிணி பெண் சினேகா இழுத்து செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Also Read:  ‘வா சேர்ந்து வாழலாம்’... திருமண நாளில் மனைவியை வீட்டுக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய கணவன்

top videos

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் வேன் ஓட்டுனரான குமாரபாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரை தாக்கியுள்ளனர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கெங்கவல்லி போலீசார் சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வேன் ஓட்டுனர் சங்கர் மற்றும் விபத்து ஏற்படுத்திய வாகனத்தையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசாரிடம் அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனால் கெங்கவல்லியில் இருந்து வீரகனூர் செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    First published:

    Tags: Died, Pregnant, Road accident, Salem