முகப்பு /செய்தி /சேலம் / சேலம் பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!

சேலம் பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!

விசைப்படகு

விசைப்படகு

இதனை இரு மாவட்டங்களையும் சேர்ந்த அரசு அலுவலர்கள், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் வெள்ளப் பெருக்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு துறையின் விசைப்படகு போக்குவரத்து 45 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை நீர்த்தேக்கத்தில், நீர் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கதவணை நீர்ப்பரப்பில், சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்ட பகுதியான  நெருஞ்சிப்பேட்டைக்கு இடையே, இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையிலான  விசைப்படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.

இதனை இரு மாவட்டங்களையும் சேர்ந்த அரசு அலுவலர்கள், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையிலிருந்து அதிகப்படியான உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் பூலாம்பட்டி கதவணை பகுதியில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் முதல் இப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையும் வாசிக்க: பள்ளி பருவ நண்பர்களுடனான சந்திப்பில் பாட்டு பாடி அசத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் - வீடியோ

தற்போது மேட்டூர் அணையிலிருந்து  வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில், 45 நாட்களுக்குப் பிறகு பூலாம்பட்டி பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு இடையே விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் விசைப்படகில் மிக குறைவான பயணிகளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 45 நாட்களாக நீண்ட தூரம் பயணித்து மாற்றுப்பாதையில் மறுகரைக்கு சென்று வந்த அப்பகுதி மக்கள் மீண்டும் விசைப்படகு போக்குவரத்து தொடங்கியதால்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

First published:

Tags: Boats, Salem, Transport