முகப்பு /செய்தி /சேலம் / ஆம்னி பேருந்தில் ஏற முயன்றவர்கள் மீது மோதிய மணல் லாரி.. 6 பேர் உயிரிழந்த பரிதாபம்

ஆம்னி பேருந்தில் ஏற முயன்றவர்கள் மீது மோதிய மணல் லாரி.. 6 பேர் உயிரிழந்த பரிதாபம்

விபத்து ஏற்படுத்திய டிப்பர் மணல் லாரி

விபத்து ஏற்படுத்திய டிப்பர் மணல் லாரி

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆத்தூர் புறவழிச்சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில் எட்டு பேர் பலியான சம்பவம் குறிப்பிடதக்கது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem, India

ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் தனியார் ஆம்னி பேருந்தின் பக்கவாட்டில் தங்கள் உடமைகளை ஏற்றி கொண்டிருந்தபோது டிப்பர் லாரி மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனியார் ஆம்னி பேருந்தில் ஏழு பேர் முன்பதிவு செய்து நள்ளிரவு பேருந்திற்காக பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் எதிரே சேலம்- சென்னை நெடுஞ்சாலையில் காத்துருந்தனர்.

அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக சாலையோரத்தில் நிறுத்தி பயணிகளையும் அவர்களது உடமைகளை பேருந்தின் பக்கவாட்டில் உள்ள கதவு மூலமாக ஏற்றிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது சேந்தமங்கலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி எம்சாண்ட் மண் ஏற்றி கொண்டு  சென்ற லாரி பேருந்தில் உடமைகளை ஏற்றிக்கொண்டு சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ரவிக்குமார் அவரது தந்தை திருநாவுக்கரசு, செந்தில்வளவன், சுப்பிரமணி, பேருந்து கிளீனர் தீபன் உள்ளிட்டோர் 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

Also Read: பள்ளிக்கு செல்ல கண்டித்த தாய்… 3-வது மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவர் தற்கொலை

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏத்தாப்பூர் காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்தோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படுகாயமடைந்த ரவிக்குமாரின் மனைவி விஜயா மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.உறவினரின் சுபநிகழ்ச்சிற்காக தனியார் பேருந்தில் பொருட்களை ஏற்றி கொண்டிருந்த போது  லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலியான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எட்டு இடங்களில் நான்கு வழிச்சாலை இரண்டு வழிச்சாலையாகவே உள்ளதால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆத்தூர் புறவழிச்சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில் எட்டு பேர் பலியான சம்பவம் குறிப்பிடதக்கது.

First published:

Tags: Chennai salem, Road accident