ஹோம் /நியூஸ் /சேலம் /

மருத்துவமனையில் புகுந்து பெயிண்டர் கழுத்தறுத்துக் கொலை.. அலறியடித்து ஓடிய செவிலியர்கள்- முன்விரோதத்தால் அரங்கேறிய கொடூரம்

மருத்துவமனையில் புகுந்து பெயிண்டர் கழுத்தறுத்துக் கொலை.. அலறியடித்து ஓடிய செவிலியர்கள்- முன்விரோதத்தால் அரங்கேறிய கொடூரம்

பெயிண்டர் கொலை

பெயிண்டர் கொலை

Salem | அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் அணி மாறியதால் ஏற்பட்ட விரோதம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தொட்டில்பட்டியைச் சேர்ந்தவர் ரகு என்கிற ரகுநாதன் (வயது 22). பிரபல ரவுடியான இவர் பெயிண்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு சசி (5), கிருத்திகா (2) ஆகிய குழந்தைகள் உள்ளனர். ரகுநாதனும் அதே பகுதியை சேர்ந்த சென்ட்ரிங் வேலை செய்யும் வெள்ளையன் என்கிற மாரிகவுண்டனும் நண்பர்கள். இவர்கள் இருவரும் ஒரே குழுவாக இருந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகின்றது.

கடந்த 2019ம் ஆண்டு முதல் ரகுநாதன் தொட்டில்பட்டியில் உள்ள வேறு ஒரு குழுவில் சேர்ந்து கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக வெள்ளையனுக்கும் ரகுநாதனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று வெள்ளையன் தனது கூட்டாளிகளுடன் ரகுநாதனின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த ரகுநாதனிடம் வேறு குழுவில் சேர்ந்து கொண்டு எனக்கு எதிராக செயல்படுகிறாயா என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றிய நிலையில் ரகுநாதனை வெள்ளையன் தரப்பினர் தாக்கியுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக கருமலைக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கும்பலை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.

இதனிடையே ரகுநாதன், வெள்ளையன் கும்பல் மீது போலீசில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றதாக தெரிகிறது. இதனை அறிந்த வெள்ளையன், மேட்டூர் அனல் மின்நிலைய நான்கு ரோட்டை சேர்ந்த கண்ணன் மகன் மூர்த்தி (36), நாட்டாமங்கலத்தைச் சேர்ந்த மாது மகன் பிரகாஷ் (30) மற்றும் சிலருடன் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

Also Read:  திருமண ஆசைக்காட்டி 10ம் வகுப்பு மாணவியை சீரழித்த இளைஞர்- காதலனை நம்பிசென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

அப்போது அங்கு அவசர சிகிச்சை பரிவில் சிகிச்சை பெறுவதற்காக அமர்ந்திருந்த ரகுநாதனை வெள்ளையன் மற்றும் அவரின் கூட்டாளிகள் கத்தியால் குத்தி, கழுத்தை சரமாரியாக அறுத்துள்ளனர். இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே ரகுநாதன் உயிரிழந்தார்.

இதனை பார்த்து செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.  இது குறித்து தகவல் அறிந்து வந்த மேட்டூர் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் வெள்ளையன், மூர்த்தி, பிரகாஷ் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து ரகுநாதனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் வந்த இரண்டு இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிந்து கைதான 3 பேரிடமும் தீவிர விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் பிடிபட்டுள்ள வெள்ளையன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மூர்த்தி, பிரகாஷ் ஆகியோர் வெல்டிங் வேலை செய்து வருகின்றனர். இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Murder, Salem