ஹோம் /நியூஸ் /சேலம் /

முன் விரோதம் : மருத்துவமனையிலேயே கழுத்தறுத்து கொல்லப்பட்ட பெயிண்டர்.. மேட்டூரில் நடந்த பகீர் சம்பவம்!

முன் விரோதம் : மருத்துவமனையிலேயே கழுத்தறுத்து கொல்லப்பட்ட பெயிண்டர்.. மேட்டூரில் நடந்த பகீர் சம்பவம்!

சேலம் கொலை

சேலம் கொலை

Salem murder | இறந்தவரின் மனைவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem | Salem | Tamil Nadu

மேட்டூர் அரசு மருத்துவமனையில் பெயிண்டர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த தொட்டில் பட்டியை சேர்ந்த ரகு (28) பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ரகுவிற்கும் தொட்டில்பட்டியை சேர்ந்த வெள்ளையன், தெர்மல் நான்கு ரோட்டை  சேர்ந்த மூர்த்தி, நாட்டா மங்களத்தை சேர்ந்த பிரகாஷ் ஆகியோருடன் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் மூன்று பேரும் நேற்று இரவு ரகுவை கத்தி உள்ளிட்ட ஆயுதம் கொண்டு தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த ரகு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு  வந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த வெள்ளையன், மூர்த்தி ,பிரகாஷ் ஆகிய மூன்று பேரும் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து கத்தியால் ரகுவை சரமாரியாக வெட்டியும், கழுத்தை அறுத்தும் படுகொலை செய்தனர்.

ALSO READ | கார் சிலிண்டர் வெடித்து இறந்த ஜமேஷா முபினின் சிசிடிவி காட்சி.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

இதனை பார்த்த செவிலியர்கள் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் . சம்பவ இடத்திற்கு  மேட்டூர் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளிகள் மூன்று பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்தவரின் மனைவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது. அரசு மருத்துவமனைக்குள் புகுந்து பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மேட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published by:Anupriyam K
First published:

Tags: Crime News, Murder, Salem