சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள முத்துமலை முருகன் கோயிலில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முருகனை காண ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாநிலம், மாவட்டங்களிலிருந்து வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த கோயிலில் முதலாம் ஆண்டு தைப்பூசத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இதனையொட்டி முதல் நாள் முதலே சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு, முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 சங்கபிஷேகமும் நடைபெற்றது.
இதனையடுத்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முருகனை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரோகரா அரோகரா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Murugan temple, Salem, Thaipusam