ஹோம் /நியூஸ் /சேலம் /

வனத்துறை எச்சரிக்கையை மீறி வங்காநரியை பிடித்து வழிபட்ட மக்கள்.. சேலத்தில் பரபரப்பு!

வனத்துறை எச்சரிக்கையை மீறி வங்காநரியை பிடித்து வழிபட்ட மக்கள்.. சேலத்தில் பரபரப்பு!

வங்காநரியை கூண்டில் அடைத்து ஊர்வலம் வந்த மக்கள்

வங்காநரியை கூண்டில் அடைத்து ஊர்வலம் வந்த மக்கள்

Salem News | சிறை தண்டனை விதிக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், கொட்டவாடி பகுதியில் பொதுமக்கள் வங்காநரியை பிடித்து வழிபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem | Salem

சேலம் அருகே கொட்டவாடி பகுதியில் வங்காநரியை பிடித்து வந்து கிராம மக்கள் பொங்கல் கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ளது கொட்டவாடி கிராமம்.

கொட்டவாடி, பேளூர், பெத்தநாய்க்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பொங்கல் பண்டிகையின் போது காட்டிலிருந்து வங்காநரியை பிடித்து வந்து ஊர்வலமாக அழைத்து சென்றும், ஜல்லிக்கட்டு நடத்துவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.

இதனிடையே சேலம் வனத்துறை அதிகாரிகள் காட்டிலிருந்து வங்காநரியை பிடித்து வரக்கூடாது. மீறுவோருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் மற்றும் 10 வருடம் சிறை தண்டனை கிடைக்கும் என எச்சரித்து இருந்தனர் .

இந்த நிலையில் வனத்துறை எச்சரிக்கையை மீறி நேற்று பிற்பகலில் வாழப்பாடி அருகே உள்ள கொட்டவாடி கிராமத்தில் சிலர் காட்டிலிருந்து வங்காநரியை பிடித்து வந்தனர். பின்னர் வங்காநரியை கூண்டில் அடைத்து பூஜை செய்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து சென்றனர். ஜல்லிக்கட்டு போட்டி மட்டும் நடத்தாமல் மற்ற பூஜைகளை செய்தனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வங்காநரியை வழிபட்டு சென்றனர்.

First published:

Tags: Jallikattu, Local News, Pongal festival, Salem