Home /News /salem /

உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்ற சேலம் அரசு மருத்துவர்கள்...

உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்ற சேலம் அரசு மருத்துவர்கள்...

 அரசு மருத்துவர் பெருமாள் பிள்ளை

அரசு மருத்துவர் பெருமாள் பிள்ளை

கொரானாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசின் நிவாரணம் வழங்கோரி, சேலம் மாவட்டம் மேட்டூரில்  தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த விருதாசம்பட்டியில், மறைந்த முன்னாள் அரசு மருத்துவ சங்க தலைவர் லட்சுமி நரசிம்மன் நினைவிடம் உள்ளது. இங்கு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழுவின் தலைவர் பெருமாள் பிள்ளை, பொருளாளர் நளினி, மறைந்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யா ஆகியோர் கடந்தமாதம் 29ம் தேதிமுதல் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். 

    அரசாணை 354-ஐ உடனடியாக 2017 முதல் அமல்படுத்தி நிலுவைத் தொகையுடன் செயல்படுத்த வேண்டும், கொரோனாவில் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசின் நிவாரணம் தரப்பட வேண்டும், உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவிற்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறியதால் போலீசார் அவர்களை  கைது செய்து ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசுமருத்துவமனைக்கு அழைத்து வந்து, அங்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இந்த நிலையில் இன்று சேலம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அரசு மருத்துவர் பெருமாள் பிள்ளை, அரசு தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக வலுக்கட்டாயமாக அழைத்து வந்தது வேதனைக்குரியது. மருத்துவர்கள் தினமான நேற்று எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் என்று எதிர்பார்த்து இருந்த வேளையில் அதற்கான அறிவிப்பு ஏதும் இல்லாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    Also see... அதிகரிக்கும் கொரோனா... மீண்டும் புதுச்சேரியில் அமலுக்கு வந்தது கொரோனா கட்டுப்பாடுகள்...

    இருந்த போதிலும் தமிழக  அரசு எங்களை அழைத்து பேசி எங்களுடைய கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். அரசு மீது நம்பிக்கை வைத்து எங்களது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்கிறோம்  என்று தெரிவித்தார்.

    செய்தியாளர்: திருமலை தமிழ்மணி, சேலம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Govt Doctors Strike, Salem

    அடுத்த செய்தி