ஹோம் /நியூஸ் /சேலம் /

மழையால் பாதிக்கப்பட்ட சாலையை சீரமைத்து அரசு பேருந்தை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர்

மழையால் பாதிக்கப்பட்ட சாலையை சீரமைத்து அரசு பேருந்தை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர்

மழையால் பாதிக்கப்பட்ட சாலை - சேலம்

மழையால் பாதிக்கப்பட்ட சாலை - சேலம்

Salem | ஆத்தூர் அருகே கல்வராயன் மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழைக் காரணமாக பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு செல்லும் வழித்தடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தார்ச்சாலைகள் சிதிலமடைந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்வராயன்மலை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே உள்ள சிற்றோடைகள் நிரம்பி காற்றாற்றில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

இதனால் கருமந்துறை அருகே உள்ள பட்டிவளவு, அடியனூர், கீழ் நாடு, கிராங்காடு, குன்னூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு செல்லும் வழித்தடங்களில் மண் சரிவு ஏற்பட்டதோடு சில இடங்களில் தார்ச்சாலைகளும் மழை நீரில் அடித்து செல்லப்பட்டு சிதிலமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Also see... ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன் மரணம்.. சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றம்

சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் ஊற்றெடுத்து செல்கிறது. இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் மற்றும் மலைவாழ் மக்கள் விவசாய இடு பொருட்களை எடுத்து செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பொதுமக்கள் உதவியுடன் அவர்களே சாலையை சீரமைத்து பேருந்தை இயக்கி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Damaged, Salem