முகப்பு /செய்தி /சேலம் / கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராஜாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராஜாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

ராஜாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

ராஜாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Salem Fisherman Shootout | கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராஜாவின் உடல், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் கோவிந்தபாடியைச் சேர்ந்த ராஜா, இளையபெருமாள் மற்றும் தருமபுரியைச் சேர்ந்த ரவி ஆகியோர் கடந்த 14-ம் தேதி, கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைப்பகுதிக்கு வன விலங்குகளை வேட்டையாடச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு கர்நாடக வனத்துறையினருக்கும், ராஜாவின் நண்பர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராஜா உயிரிழந்ததாகவும் தெரிகிறது.

தொடர்ந்து, முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை வரும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி ராஜாவின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்றுக் குடும்பத்தினர் அவரது உடலை வாங்கச் சம்மதம் தெரிவித்தனர். அதன்பேரில் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்த ராஜாவின் குடும்பத்தினர் கையெழுத்திட்டு உடலைப் பெற்றுக்கொண்டு, சொந்த ஊரான கோவிந்தபாடிக்குக் கொண்டு சென்றனர்.

செய்தியாளர் : திருமலை தமிழ்மணி - சேலம்

First published:

Tags: Karnataka, Local News, Salem