முகப்பு /செய்தி /சேலம் / கேஸ் சிலிண்டரில் கசிவு.. ஆத்தூரில் தீப்பிடித்து எரிந்த குடிசை வீடுகள்

கேஸ் சிலிண்டரில் கசிவு.. ஆத்தூரில் தீப்பிடித்து எரிந்த குடிசை வீடுகள்

ஆத்தூர் தீ விபத்து

ஆத்தூர் தீ விபத்து

Salem Fire Accident : ஆத்தூரில் சமையல் சிலிண்டரில் ஏற்பட்ட  கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குடிசை  வீடுகள்  எரிந்து  சேதமடைந்தன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem, India

ஆத்தூர்  அருகே  வீட்டில் சமையல்  செய்து கொண்டிருக்கும் போது  சமையல் சிலிண்டரில் ஏற்பட்ட  கசிவு காரணமாக தீ விபத்து. 

சேலம்  மாவட்டம்  ஆத்தூர்  அருகே  உள்ள  மஞ்சினி  கிராமத்தில்  ஆத்தூரில் இருந்து கெங்கவல்லி  செல்லும்  சாலையில்  சக்திவேல்  என்பவருக்கு சொந்தமாக தகரத்தால்  வேயப்பட்ட  இரண்டு குடிசை  வீடுகள்  உள்ளன. இதில் பழனிசாமியின் மனைவி  லட்சுமி (வயது 65) என்பவரும், மற்றொரு  வீட்டில் சந்திரசேகர் என்பவரும்  வசித்து வருகின்றனர். இந்நிலையில் மூதாட்டி லட்சுமி  வீட்டில்  சமையல் கேஸ்  சிலிண்டரில்  சமைத்து கொண்டிருந்த போது எதிர்பாராத  விதமாக  சிலிண்டரில் ஏற்பட்ட கேஸ் கசிவு காராணமாக திடீரென தீப்பற்றியது.

உடனடியாக  மூதாட்டி  லட்சுமி  வீட்டிலிருந்து  வெளியேறினார். தீ கொழுந்து  விட்டு  எரிய  தொடங்கிய சிறிது  நேரத்தில்  அருகில்  இருந்த சந்திரசேகர்  வீடும்  தீப்பற்றியது.,    இரண்டு வீடுகளும் மளமள வென  கொழுந்து விட்டு  எரிவதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயை  அணைக்கும்  முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ கட்டுக்குள் வராததால் ஆத்தூர்  தீயணைப்பு நிலையத்திற்கு  தகவல்  தெரிவித்துள்ளனர். அதன்  பேரில்  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு  வீரர்கள்  ஒரு  மணி  நேரத்திற்கு  மேலாக  போராடி  தீயை அணைத்தனர்.

நல்வாய்ப்பாக  பக்கத்து  வீடான  சந்திரசேகர்  வீட்டிலும்  யாரும் இல்லாததால்  அசம்பாவிதம்  தவிர்க்கப்பட்டது. மூதாட்டி  லட்சுமி  வீட்டில் இருந்த  65,000 ரொக்கம், நகை , பீரோ ,கட்டில்  உள்ளிட்ட  1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள்  முழுவதும்  எரிந்து  சேதமாகின. இந்த தீ  விபத்து குறித்து  ஆத்தூர்  ஊரக  போலீசார்  விசாரணை  மேற்கொண்டு  வருகின்றனர்.

First published:

Tags: Fire accident, Local News, Salem, Tamil News