ஹோம் /நியூஸ் /சேலம் /

மதுபோதையில் சொகுசு கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் - சேலத்தில் பரபரப்பு

மதுபோதையில் சொகுசு கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் - சேலத்தில் பரபரப்பு

விபத்து ஏற்படுத்திய இளைஞர்கள்

விபத்து ஏற்படுத்திய இளைஞர்கள்

Salem News | சேலத்தில் மது போதையில் சொகுசு கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய இளைஞரை பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் ஜங்ஷன் பிரதான சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க்  பகுதியில் இன்று காலை அதிவேகத்தில் வந்த சொகுசு கார் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் ஒருவர் மற்றும் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர்.  அதிவேகத்தில் வந்து கார் விபத்தை ஏற்படுத்தி விட்டு சாலையின் தடுப்புச் சுவரில் மோதி  நின்றது. இந்த விபத்தில் காயம் அடைந்த கிருத்திகா, சிவரஞ்சனி மற்றும் முதியவரை  மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய  காரில் இருந்த நான்கு பேரில் இரண்டு இளைஞர்கள் தப்பி ஓடினர். மதுபோதையில் இருந்த ஜெகன் என்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மதுபோதையில் இருந்த அந்த இளைஞரை காவல்துறையினர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற அந்த இளைஞரை மருத்துவமனை காவலர்கள் சுற்றிவளைத்தனர்.

இதுகுறித்து செய்திக்காக காட்சிகளை பதிவு செய்து கொண்டிருந்த   ஒளிப்பதிவாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜெகன் மற்றும் அவரது சகோதரர் ஒளிப்பதிவாளருக்கு ஆதரவாக பேசிய நரேஷ்குமார் என்பவரை மருத்துவமனை வளாகத்திலேயே தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை நேரத்தில் அளவு கடந்த போதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விபத்தை பார்த்தவர்கள் வலியுறுத்தினர்.

செய்தியாளர்: தமிழ்மணி (சேலம்)

First published:

Tags: Accident, Crime News, Local News, Salem, Tamil News