முகப்பு /செய்தி /சேலம் / மீண்டும் காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி.. கோயிலில் தூக்கிட்டு தற்கொலை செய்த ஓட்டுனர்!

மீண்டும் காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி.. கோயிலில் தூக்கிட்டு தற்கொலை செய்த ஓட்டுனர்!

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்ட தடைக்கான சட்டம் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டு தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி ஓப்புதலுக்காக நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த ஓட்டுனர், கோயிலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வாழப்பாடி அருகே சேசன்சாவடி அடுத்துள்ள காட்டு வேப்பிலைப்பட்டியில் சிறிய கோயில் உள்ளது. இங்கு ஒருவரின் சடலம் தூக்கில் தொங்குவதாக அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டபோது, ஓமலூர் அருகே உள்ள உத்தண்டிவளவு பகுதியை சேர்ந்த மணிமுத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. ஓட்டுனரான இவர் ஆன்லைன் விளையாட்டில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாகவும் இதனை குடும்பத்தினர் கண்டித்த நிலையில், கோயிலில் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தடைக்கான சட்டம் தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டு தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி ஓப்புதலுக்காக நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Commit suicide, Local News, Online rummy, Salem