முகப்பு /செய்தி /சேலம் / “தீப்பெட்டியை குடுமா.. நான் நிறையா சிகரெட் பற்ற வெச்சிருக்கேன்” சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சால் பரபரப்பு..

“தீப்பெட்டியை குடுமா.. நான் நிறையா சிகரெட் பற்ற வெச்சிருக்கேன்” சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சால் பரபரப்பு..

விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என்.நேரு

விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என்.நேரு

Minister K,N.Nehru : நான் நிறையா சிகரெட் பற்ற வைத்திருக்கிறேன் சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் கே.என்.நேரு பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம், ஓமலூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாவட்டத்தில் 1.86 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கட்டிடங்களை திறந்து வைத்தனர்.

முன்னதாக மருத்துவமனையில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற போது அங்கு இருந்த அரசு பெண் செவிலியர் குத்துவிளக்கு ஏற்ற மெழுகுவர்த்தியை பற்ற வைக்க தீப்பெட்டியை உரசியபோது தீக்குச்சானது எரிந்து எரிந்து இரு முறை அணைந்தது.

இதனையடுத்து அங்கிருந்த அமைச்சர் கே.என்.நேரு, “தீப்பெட்டியை குடுமா. இதெல்லாம் விடு நான் நிறைய சிகரெட் புடிச்சிருக்கேன்” என கூறி மெழுகுவர்த்தியை பற்ற வைத்தார். இதைத்தொடர்ந்து முதியோர்களுக்கு உதவி தொகை வழங்கும் ஆணை, கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பு நல பெட்டகம், மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் திமுக மத்திய மாவட்ட செயலாளரும் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : திருமலை தமிழ்மணி - சேலம்

First published:

Tags: K.N.Nehru, Local News, Salem