Home /News /salem /

துப்பாக்கிச் சுடுதலில் உலக சாதனை புரிந்த எடப்பாடி ரைபிள் கிளப் மாணவ, மாணவிகள்

துப்பாக்கிச் சுடுதலில் உலக சாதனை புரிந்த எடப்பாடி ரைபிள் கிளப் மாணவ, மாணவிகள்

இலக்கை நோக்கி சுட்ட மாணவன்

இலக்கை நோக்கி சுட்ட மாணவன்

துப்பாக்கிச் சுடுதலில் உலக சாதனை புரிந்த சேலம் மாவட்டம் எடப்பாடி ரைபிள் கிளப் மாணவ, மாணவிகள் 17 பேருக்கு டிஎஸ்பி ஆரோக்கியராஜ் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Edappadi, India
துப்பாக்கிச் சுடுதலில் உலக சாதனை புரிந்த சேலம் மாவட்டம் எடப்பாடி ரைபிள் கிளப் மாணவ, மாணவிகள் 17 பேருக்கு டிஎஸ்பி ஆரோக்கியராஜ் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

தமிழ்நாடு ஏர்கன் அசோசியன் சார்பில் எடப்பாடி ரைபிள் கிளப் மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி தனியார் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

அதற்கு முன்னதாக எடப்பாடி ரைபிள் கிளப் ஜூனியர்களுக்கான பிரிவில் ஹரிஷ் ராகவ், வைபவன்,  அஸ்வின், சிந்துஜா, கமலேஷ்வர் என 5 பேர் கொண்ட குழு பள்ளி விளையாட்டு மைதானத்தில் 150 பாட்டில்களை 7.02 நிமிடத்தில் சூட்டிங் செய்து புதிய உலக சாதனைபடைத்தனர் .

Also Read : கோவை விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

தொடர்ந்து ஏற்கனவே நடைபெற்ற யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் 80 நிமிடத்தில் 2022 பேலட்ஸ் சூட்டிங் செய்வது என இலக்கு இதனை எடப்பாடி ரைபிள் கிளப் சீனியர் பிரிவில் ராஜ்குமார், ரகு, பவித்ரா, மௌனிஸ்வர், தவதர்ஷன், சுஜய்விக்னேஷ், ஆல்ட்ரின் பாரியே, ஜனனி, சந்துரு, ரோகித், கவின், கனிகா என 12 மாணவ,மாணவிகள்  பங்கேற்று 2258 பேலட்ஸ் சூட்டிங் செய்து உலக சாதனை படைத்தனர்.

யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு ஏர்கன் அசோசியேசன் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் சிறப்பு விருந்தினராக மாவட்டத் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி வாழ்த்தினார்.

இதில்  எடப்பாடி ரைபிள் கிளப் தலைவர் சின்னசாமி, செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் சிவக்குமார், பயிற்சியாளர் ரகு மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 
Published by:Raj Kumar
First published:

Tags: Gun shoot, Shooting, World record

அடுத்த செய்தி