ஹோம் /நியூஸ் /சேலம் /

தை திருவிழா கொண்டாட்டம்... சேலத்தில் பக்தர்கள் உடலில் கத்தியால் அடித்து நேர்த்திக்கடன்!

தை திருவிழா கொண்டாட்டம்... சேலத்தில் பக்தர்கள் உடலில் கத்தியால் அடித்து நேர்த்திக்கடன்!

கத்தி போட்டு பக்தர்க ள் நேர்த்திக்கடன்

கத்தி போட்டு பக்தர்க ள் நேர்த்திக்கடன்

Salem devotees | சேலம் குகை ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாத முதல் நாளில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem | Salem

சேலம் குகை ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் ஆயிரக்கணக்கான வீரக்குமாரர்கள் தங்கள் உடலில்  கத்திப்போட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர்.

சேலம் குகை மாரியம்மன் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாத முதல் நாளில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா இன்று நடைபெற்றது. அதிகாலை முதல் சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உலகம் செழிப்பாக இருக்கவும் குடும்பம் சந்தோஷமாக திகழவும் திருமண வரம் வேண்டியும் குழந்தை பாக்கியம் வேண்டியும் என பல்வேறு வேண்டுதல்களை அம்மனுக்கு வைக்கும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் வீரகுமாரர்கள் தங்கள் உடலில் கத்தி போட்டு அம்மனை வரவேற்றனர். கத்தி போடுதலின் போது ஆடல், பாடலுடன் மார்பிலும், கையிலும், கத்தியால் காயத்தினை ஏற்படுத்தி வேசுகோ தீசுகோ என கோஷங்கள் எழுப்பியவாரு மார்பில் கத்தி போட்டு அம்மனை அழைத்தனர் .

இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கத்தி போடும் வீர குமாரர்கள் சேலம் செவ்வாய்பேட்டை கரி மார்கெட் பகுதியில் அம்மனை அழைத்து  உடலில் கத்திப் போட்டுக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தின் போது சிவன், பெருமாள், அம்மன், ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களை தத்ரூபமாக வேடம் தரித்து ஆடி பாடி தெய்வங்கள் ஊர்வலமாக சென்றது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

செய்தியாளர்: திருமலை, சேலம்.

First published:

Tags: Pongal 2023, Salem