முகப்பு /செய்தி /சேலம் / கல்லூரி மாணவிகளுடன் நடனமாடிய சேலம் துணை மேயர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

கல்லூரி மாணவிகளுடன் நடனமாடிய சேலம் துணை மேயர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

மாணவிகளுடன் நடனமாடிய துணை மேயர் சாராதா

மாணவிகளுடன் நடனமாடிய துணை மேயர் சாராதா

Salem Deputy Mayor Dance | மாணவிகளின் அழைப்பை ஏற்று துணை மேயர் நடனம் ஆடி நிகழ்ச்சியை ஆரவாரம் செய்ய வைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem, India

கல்லூரி மாணவிகளுடன் சேலம் துணை மேயர் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உலக மகளிர் தினம் மார்ச் 08-ம் தேதி  கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் மாணவிகள் நடனம் ஆடினர். அப்போது துணை மேயர் சாராதாவை தங்களுடன் சேர்ந்து நடனமாட அழைத்தனர்.

' isDesktop="true" id="907011" youtubeid="i_6ikGpUwts" category="salem">

அதனை மறுக்காமல் துணை மேயர் சாரதா தேவி மாணவிகளுடன் கலகலப்பாக நடனமாடி மாணவிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் . மாணவிகளுடன் துணை மேயர் நடனமாடிய வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Local News, Salem, Viral Video