ஹோம் /நியூஸ் /சேலம் /

ரூ.19 லட்சம் கடனுக்கு 40 லட்சம் கேட்டு டார்ச்சர்.. தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் சோகம்

ரூ.19 லட்சம் கடனுக்கு 40 லட்சம் கேட்டு டார்ச்சர்.. தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் சோகம்

கடன் தொல்லையால் விபரீத முடிவு

கடன் தொல்லையால் விபரீத முடிவு

Salem News : சேலத்தில் கடன் தொல்லை காரணமாக கணவன் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாநகர் அஸ்தம்பட்டி அருகே உள்ளது பெரிய புதூர் . இங்கு வசித்து வந்தவர் ராஜேந்திரன் ( வயது 66) இவரது மனைவி சாந்தி (வயது 55 ). கூலி வேலைக்கு சென்று வந்த ராஜேந்திரன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

குடும்ப செலவிற்காக ராஜேந்திரன் வீட்டை அடமானம் வைத்து பெரிய புதூரைச் சார்ந்த ஆறு பேரிடம் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு  19 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். தற்போது வட்டியுடன் சேர்த்து ரூபாய் 40 லட்சம் தர வேண்டும் என கடன் கொடுத்தவர்கள் டார்ச்சர் செய்து வந்ததாக தெரிகிறது.

வாங்கிய கடனுக்கு அவ்வப்போது வட்டியும் ராஜேந்திரன் கொடுத்து வந்ததாகவும். ஆனால் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில்  இன்று அதிகாலை கணவனும் மனைவியும் விஷத்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Also Read:  ஷேர் ஷாட்டில் பழக்கம்.. தனிமையில் உல்லாசம் - காதலித்து ஏமாற்றிய ராணுவ வீரரின் திருமணத்தை நிறுத்திய காதலி

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் . இதன் பேரில் காவல் ஆய்வாளர் காந்திமதி மற்றும் போலீசார் விரைந்து சென்று கணவன் மனைவி சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு செய்வதற்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

ராஜேந்திரன் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டதற்கு யார் யார் காரணம் என தற்போது விசாரணை நடக்கிறது.

கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்டது அழகாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: திருமலை தமிழ்மணி ( சேலம்)

-----------------------------------------------------------------------------------------------

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

-----------------------------------------------------------------------------------------------

First published:

Tags: Crime News, Salem, Tamil News