ஹோம் /நியூஸ் /சேலம் /

போலீஸ்காரரை தாக்கிய கவுன்சிலர் மகன் - டூ வீலரில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்

போலீஸ்காரரை தாக்கிய கவுன்சிலர் மகன் - டூ வீலரில் வேகமாக வந்தவர்களை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்

போலீஸ்காரர் மீது தாக்குதல்

போலீஸ்காரர் மீது தாக்குதல்

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை  தாக்கியதாக கவுன்சிலர் மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Salem, India

  சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் அசோக் (வயது 30). இவர் காவல் துறை ரோந்து வாகன டிரைவராக உள்ளார். நேற்று அவருக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து சாதாரண உடையில் (மப்டியில்) டூ வீலரில் சின்னதிருப்பதி அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது 3 இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் மோதுவது போல் வேகமாக வந்துள்ளனர்.

  இதனை பார்த்த போலீஸ்காரர் அசோக் அவர்களை கண்டித்துள்ளார். இதனால் போலீஸ்காரருக்கும் டூ வீலரில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  திடீரென போலீஸ்காரரை டூ வீலரில் வந்த இளைஞர்கள் தாக்கியுள்ளனர். அப்போது அவர் நான் போலீஸ்காரர் என கூறியதையும் கேட்காமல் அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. மேலும் அவரை விரட்டி விரட்டி அடித்துள்ளனர்.

  Also Read: மனைவியின் கள்ளக்காதலனை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய கணவன்.. சேலத்தில் நடந்த பயங்கரம்

  இதனை பார்த்த பொதுமக்கள் அந்த இளைஞர்களை மடக்கி பிடித்தனர். உடனடியாக அஸ்தம்பட்டி மற்றும் கன்னங்குறிச்சி காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொது மக்கள் பிடித்து வைத்திருந்த 4 பேரை கன்னங்குறிச்சி அழைத்து வந்தனர்.

  இதனிடையே  இளைஞர்கள் தாக்கியதில் போலீஸ்காரர் அசோக்கின் கை முறிந்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காவலரை  தாக்கியதாக அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான், ரிகான்பாஷா, அஸ்லாம் அலி, ரிஸ்வான் ஆகியோரை கைது செய்தனர். ஒருவர் தலைமறைவாகிவிட்டார். கைதான அப்துல்ரகுமான், 53வது வார்டு பெண் கவுன்சிலர் சாதாஜ் (தமமுக) என்பவரின் மகன் ஆவார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Police, Salem, Tamil News, Two Wheeler