ஹோம் /நியூஸ் /சேலம் /

தொடர் திருட்டில் டியூசன் மாஸ்டர்.. நண்பருடன் சேர்ந்து கைவரிசை - சிக்கியது எப்படி..?

தொடர் திருட்டில் டியூசன் மாஸ்டர்.. நண்பருடன் சேர்ந்து கைவரிசை - சிக்கியது எப்படி..?

கைது செய்யப்பட்டவர்கள்

கைது செய்யப்பட்டவர்கள்

ஆசிரியராக பணியாற்றியவர் திருட்டில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem | Salem

சேலத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த டியூசன் மாஸ்டர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள ஜெயப்பூரி வீதி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இந்த பகுதியில் நடந்த தொடர் திருட்டு மற்றும்  10-க்கு மேற்பட்ட வீடுகளில் நடந்த திருட்டு முயற்சிகள் சம்பவங்களில் ஈடுபட்டவரை பிடிக்க மகுடஞ்சாவடி போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே நேற்று அதிகாலை மகுடஞ்சாவடி மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழிய வந்த 2 மர்ம நபர்கள், சத்யராஜை வழி மறித்து ரூ. 1300 மற்றும் கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றை பிடுங்கி கொண்டு தப்பியோடியுள்ளனர். இது தொடர்பாக சத்யராஜ் அளித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று பழைய சந்தைப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் அவ்வழியே வந்தவர்கள் போலீசாரை கண்டவுடன் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் எடப்பாடி, புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (31) என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க | ஆற்றின் நடுவே மண்டியிட்டவாறு இளைஞர் சடலமாக மீட்பு - போலீஸார் தீவிர விசாரணை

எம்.ஏ பட்டதாரியான பிரகாஷ், டீச்சர் ட்ரெய்னிங் படித்து, தனியார் பள்ளியின் ஆசிரியராக பணியாற்றியதோடு, சில ஆண்டுகளுக்கு முன்பு டியூசன் சென்டர் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், இவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த தனபால் (31) என்பவரும் இவருடன் சேர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

போலீசாரின் தொடர் விசாரணையில்  நேற்று அதிகாலையில் மகுடஞ்சாவடி பகுதியில் வழிப்பறியில்  ஈடுபட்டதாகவும், மேலும் , ஜெய்புரி வீதி பகுதியை சார்ந்த முரளி என்பவர் வீட்டில் 5 பவுன் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து  மகுடஞ்சாவடி எஸ்ஐ ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்தார்.

பின்னர் இது குறித்து மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட பிரகாஷ், தனபால் ஆகியோரை கைது செய்து சங்ககிரி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில்  அடைத்தனர். மேலும், போலீசார் விசாரணையில் எடப்பாடி போலீஸ் நிலையத்தில் கடந்த 2016 - ல் பிரகாஷ் என்பவர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டியூசன் சென்டர் நடத்தி வந்த பட்டதாரி இளைஞர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by:Anupriyam K
First published:

Tags: Salem, Theft