ஹோம் /நியூஸ் /சேலம் /

14 வயது சிறுமிக்கு 32 வயதான ஆணுடன் திருமணம் : 5 பேர் போக்சோவில் கைது

14 வயது சிறுமிக்கு 32 வயதான ஆணுடன் திருமணம் : 5 பேர் போக்சோவில் கைது

போக்சோவில் கைது செய்யப்பட்டவர்கள்

போக்சோவில் கைது செய்யப்பட்டவர்கள்

ஏற்காட்டில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு குழந்தை திருமணம் நடத்திய 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் ஏற்காடு மலை கிராமங்களில் ஒன்று நல்லூர். ஏற்காட்டில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில்  உள்ள இந்த ஊரைச் சார்ந்தவர் வெள்ளையன் கூலி தொழிலாளி. இவரது மகன் அன்பழகன் வயது 32. இவரும் கூலி வேலைக்குச் சென்று வந்தார். அன்பழகனுக்கு திருமணத்திற்காக பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தனர்.

அப்போது வெள்ளக்கடை பகுதியைச் சேர்ந்த உறவினர் பெண்ணான 14 வயது மாணவியை திருமணம் செய்து வைக்க பேசி முடிவு செய்து சில நாட்களுக்கு முன்பு திருமணமும் நடந்தது.

இந்த மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். திருமணம் ஆன பிறகு மாணவி  வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றார். மாணவி கழுத்தில் தாலிகயிற்றுடன் பள்ளிக்கு வந்ததை அறிந்த ஆசிரியர்கள் சிலர் 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு பேசி மாணவி திருமணமாகி வந்துள்ளதை தெரிவித்தனர்.

பின்னர் இது உண்மையா என சமூக நலத்துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அதிகாரி வருவாய் துறை அதிகாரி அனைவரும் தனித்தனியே விசாரணை செய்தனர். இதில் 14 வயதான மாணவிக்கு 32 வயதான வாலிபருடன் திருமணம் செய்து வைத்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் சமூக நலத்துறை அதிகாரிகள் மாணவியை  மீட்டு அவருக்கு அறிவுரைகள் வழங்கி  சேலத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்

பின்னர் சமூக நலத்துறை அதிகாரிகள், மாணவிக்கு குழந்தை  திருமணம் நடந்தது குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்விற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டதின் பேரில் டிஎஸ்பி தையல்நாயகி கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்தனர்.

இதையும் படிங்க: 6ம் வகுப்பு கணிதப் பாடத்தில் சீட்டு விளையாட்டினை மேற்கோள் காட்டி பாடம்..!

விசாரணைக்கு பின்னர் திருமணம் செய்து கொண்ட வாலிபர் அன்பழகன் மற்றும் அவரது தந்தை  வெள்ளையன், வெள்ளையனின் மனைவி வெள்ளாயி, மாணவியின் தந்தை சந்திரன் மாணவியின் தாயார் உண்ணாமலை ஆகியோர் மீது, குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று கைது செய்யப்பட்டனர்.

பின்னர் நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அன்பழகன், வெள்ளையன், சந்திரன் ஆகிய மூன்று பேர் சேலம் மத்திய சிறையிலும் வெள்ளாயி உண்ணாமலை ஆகியோர் சேலம் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

First published:

Tags: Child marriage, POCSO case, Salem