முகப்பு /செய்தி /சேலம் / ஓடும் பேருந்தில் திகுதிகுவென பற்றி எரிந்த தீ.. அலறியடித்து ஓடிய பயணிகள்.. சேலத்தில் பரபரப்பு!

ஓடும் பேருந்தில் திகுதிகுவென பற்றி எரிந்த தீ.. அலறியடித்து ஓடிய பயணிகள்.. சேலத்தில் பரபரப்பு!

பேருந்தில் பற்றி எரிந்த தீ

பேருந்தில் பற்றி எரிந்த தீ

Salem accident | கோவையிலிருந்து பெங்களூருக்கு 44 பயணிகளுடன் சென்ற பேருந்தில் திடீரென தீ பற்றி எரிந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Salem | Salem

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஓடும் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 பெண்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.  கோவையிலிருந்து பெங்களூருக்கு நேற்று இரவு ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. இதில் ஓட்டுனர் ராஜன் (35) உட்பட 44 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேட்டூர்- தருமபுரி சாலையில் புதுச்சாம்பள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென பேருந்தின் பின்புறத்தில் புகை கிளம்பியுள்ளது.

பயணிகள் ஓட்டுனரிடம் கூறியதும் ஓட்டுனர் உடனடியாக பேருந்து நிறுத்தினார். திடீரென தீ பேருந்து முழுவதும் பரவியது பயணிகள் முண்டியடித்துக் கொண்டு கீழே இறங்கினார்கள். சிலர் அலறிக்கொண்டு ஜன்னல் வழியாக குதித்தனர். தங்களது உடைமகளை விட்டு பயணிகள் வெளியே வந்தனர்.

தீ கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்த மேட்டூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சுமார் 30 நிமிட நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 11 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது இவர்கள் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பம் தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடும் பேருந்தில் தீ பற்றிய சம்பவம் மேட்டூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த தீ விபத்தில் பயணிகள் கொண்டு வந்த லேப்டாப் மற்றும் உடமைகள் முழுமையாக எரிந்து சேதம் அடைந்துள்ளன.

First published:

Tags: Accident, Local News, Salem