ஹோம் /நியூஸ் /சேலம் /

கூடுதல் வட்டி தருவதாக ரூ.400 கோடி மோசடி: பாஜக பிரமுகர் பரபரப்பு வாக்குமூலம்!

கூடுதல் வட்டி தருவதாக ரூ.400 கோடி மோசடி: பாஜக பிரமுகர் பரபரப்பு வாக்குமூலம்!

400 கோடி மோசடி

400 கோடி மோசடி

ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் ரூ.18,000 வீதம் ஆண்டுக்கு ரூ.2.16 லட்சம் தருவதாகக் கூறி பணம் வசூல் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem |

சேலத்தில், தனியார் நிதி நிறுவனம் நடத்தி கூடுதல் வட்டி தருவதாக ஆசை காட்டி மோசடி செய்ததாக கைதான பாஜக பிரமுகர், 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலத்தில் காரில் பாஜக கொடியை கட்டிக் கொண்டு கட்சியின் முக்கிய நிர்வாகி போல் வந்தவர் பாலசுப்பிரமணியன். 2017ல் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட் வின் ஐடி டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் பெயரில் நிதி நிறுவனம் தொடங்கினார்.

நிதி நிறுவனத்தின் கிளைகளை வேலூர், நாமக்கல், கோவை என தமிழகத்தின் பல இடங்களில் தொடங்கியுள்ளார்.

அவரது நிதி நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் செலுத்தினால், ஆண்டுக்கு 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் தருவதாக கவர்ச்சியான விளம்பரங்களை செய்தார்.  இதனை நம்பி பலர் அதில் முதலீடு செய்துள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை : வனத்துறை எச்சரிக்கை!

அதன்படி ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் ரூ.18,000 வீதம் ஆண்டுக்கு ரூ.2.16 லட்சம் தருவதாகக் கூறி பணம் வசூல் செய்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக முதலீட்டாளர்களுக்கு பணத்தை தராமல் மோசடி செய்ததால் நூற்றுக்கணக்கானோர் அவர் மீது  போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து அவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அப்போது, சுமார் 35 ஆயிரம் பேரிடம், மொத்தம் 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Fraud, Salem, Scam