Home /News /salem /

ஆப்பாயில்ல ஏன் பெப்பர் அதிகமா இருக்கு..! குடிபோதையில் ஹோட்டலை தாக்கி அட்டகாசம்

ஆப்பாயில்ல ஏன் பெப்பர் அதிகமா இருக்கு..! குடிபோதையில் ஹோட்டலை தாக்கி அட்டகாசம்

ஹோட்டலில் தகராறு

ஹோட்டலில் தகராறு

ஆத்தூர் அருகே ஆப்பாயிலில் பெப்பர் அதிகமாக உள்ளது எனக்கூறி குடிபோதையில் மாஸ்டரை தாக்கி ஓட்டலை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்ட அதிமுக, பிரமுகர்கள் 4 பேர் மீது  வழக்கு பதிவு...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India
    ஆத்தூர் அருகே ஆப்பாயிலில் பெப்பர் அதிகமாக உள்ளது எனக்கூறி குடிபோதையில் மாஸ்டரை தாக்கி ஓட்டலை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்ட அதிமுக, பிரமுகர்கள் 4 பேர் மீது  வழக்கு பதிவு.

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி நான்கு ரோடு தம்மம்பட்டி  செல்லும் மெயின்  ரோட்டில்  குமரேசன் ( வயது 36 ) என்பவர்  ஓட்டல்  நடத்தி  வருகிறார் .  இதனிடையே நேற்று  இவரது  கடைக்கு  கெங்கவல்லி பகுதியைச்  சேர்ந்த  4  பேர் குடிபோதையில்  வந்துள்ளனர் .  அப்போது அவர்கள்  நான்கு பேரும் கடையில் சாப்பிட்டு  கொண்டிருந்த போது  ஆப்பாயில்  கேட்டுள்ளனர், மாஸ்டரும் ஆப்பாயில் போட்டு கொடுத்துள்ளார், பின்னர் ஆப்பாயில் ஒழுங்காக போட வில்லை  பெப்பர் அதிகமாக உள்ளது எனக்கூறி  தகராறில்  ஈடுபட்டனர் .

    இதுகுறித்து  கடை  உரிமையாளர்  குமரேசன்  கேட்ட போது  அவரையும்  கடையில்  இருந்த  ஊழியர்களையும்  தாக்கியுள்ளனர் . பின்னர்  கடையில்  இருந்த  மாவு , முட்டைகளை  கீழே  தள்ளி  சூறையாடியுள்ளனர் .   இச்சம்பவம் குறித்து ஓட்டல் உரிமையாளர் குமரேசன் கெங்கவல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஓட்டலில் இருந்த சிசிடிவி, கேமராவை ஆய்வு செய்தனர்.

    Also Read: இதுக்கு மேல முடியாது..! காதல் கணவனை அரிவாளால் வெட்டிக்கொன்ற மனைவி - மயிலாடுதுறையில் பயங்கரம்

    அதில் குடிபோதையில் இருந்த நபர்கள் ஓட்டல் மாஸ்டர் மற்றும் உரிமையாளரை தாக்கியது வீடியோவில் பதிவானது தெரியவந்தது, இதனையடுத்து ஆப்பாயிலுக்காக குடிபோதையில் ஓட்டலை சூறையாடிய அதிமுக, பிரமுகர்களான பிரவீன் , பிரபு , கெளதம் , நடராஜ்  ஆகியோர்  மீது  4 பிரிவின்  கீழ்  போலீசார் வழக்கு  பதிவு செய்துள்ளனர் .  இவர்கள்  4  பேர்  மீதும்  ஏற்கனவே  கெங்கவல்லி  பேரூராட்சி தலைவர்  மகனை தாக்கியதாக வழக்கு  பதிவு  செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: ADMK, Crime News, Salem

    அடுத்த செய்தி