ஹோம் /நியூஸ் /சேலம் /

லவ் டு டே பாணியில் செல்போன் எக்ஸ்சேஞ்ச்.. சிக்கிய அரைநிர்வாண வீடியோ - மாப்பிள்ளையை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய இளம்பெண்

லவ் டு டே பாணியில் செல்போன் எக்ஸ்சேஞ்ச்.. சிக்கிய அரைநிர்வாண வீடியோ - மாப்பிள்ளையை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய இளம்பெண்

சேலம் இளைஞர் கைது

சேலம் இளைஞர் கைது

லவ்டுடே  திரைப்பட பாணியில்  செல்போனை மாற்றிய  ஆம்புலன்ஸ்  டிரைவர்  போக்சோவில் கைதான சம்பவம்  வாழப்பாடி  பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Salem, India

சேலம்  மாவட்டம்  வாழப்பாடியை  அடுத்த  பேளூர்  மாதா  கோவில்  பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 23)  இவர் தனியார்  ஆம்புலன்ஸ்  டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில்  தான் திருமணம்  நிச்சயமானது.

இந்நிலையில் லவ்டுடே திரைப்பட பாணியில் அரவிந்திற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் அவரது செல்போனை வாங்கி பார்த்துள்ளார். செல்போனை  அலசி  ஆராய்ந்த போது  அதிர்ச்சியில்  உறைந்து  போனார். அவரது செல்போனில் இருந்த  வீடியோக்களை  பார்த்த  போது, 10-ம் வகுப்பு  மாணவியின்  அரைநிர்வாண வீடியோவை  மற்றொரு  முனையில்  அரவிந்த்  பார்ப்பது  போன்று  ஒரு வீடியோ  இருந்துள்ளது.

இதுகுறித்து  நிச்சயிக்கப்பட்ட  பெண்  விசாரிக்க  தொடங்கினார். பேஸ்புக்  உள்ளிட்ட  சமூகவலைத்தளங்களில்  புதிதாக  அக்கவுண்ட தொடங்கி அவர் 10-ம் வகுப்பு  மாணவி  ஒருவரை  குறிவைத்து  காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். அவரின்  செல்போன்  எண்ணை  பெற்று  தொடர்ந்து  காதல் மொழி  பேசியதும்  தெரியவந்தது.  அரவிந்த்தின்  பேச்சில்  மாணவியும் மயங்கியுள்ளார்.

Also Read: புதையல் எடுக்க பெண் குழந்தையை நரபலி கேட்ட ஜோசியர்.. அதிர்ச்சியில் உறைந்த தம்பதி - நடந்தது என்ன?

ஒரு  கட்டத்தில்  வீடியோ  காலில் அரவிந்த்  அந்த மாணவியுடன்  பேசியுள்ளார்.  அப்போது  அந்த  மாணவியை  அரை  நிர்வாணமாக  பார்க்க  ஆசைப்படுவதாக  கூறி  அரவிந்த் வற்புறுத்தியுள்ளார். அப்போது வீடியோ பதிவு  செய்ய  மாட்டார் என்று  நம்பி அந்த  மாணவியும்  அரை  நிர்வாணமாக இருக்க  அந்த  மாணவிக்கு  தெரியாமல் அரவிந்த்  வீடியோவாக  பதிவு  செய்த  காட்சியை  தான்  அவருக்கு நிச்சயிக்கப்பட்ட  பெண்  பார்த்து  உள்ளார்.

உடனே  அவர்  அந்த  மாணவியின் பெற்றோருக்கு  தகவல்  தெரிவித்துள்ளார். இந்த  தகவலை  கேட்டு  அதிர்ச்சி அடைந்த  மாணவியின்  பெற்றோர்  வாழப்பாடி  அனைத்து  மகளிர்  காவல் நிலையத்தில்  புகார்  கொடுத்தனர்.  புகாரின் பேரில்  அரவிந்த்  மீது  போக்சோ சட்டத்தின்  கீழ்  இன்ஸ்பெக்டர்  தனலட்சுமி  வழக்குப்பதிவு  செய்து  அவரை கைது  செய்தனர்.   மேலும் கைதான  அரவிந்திடம்  இதுபோன்று  வேறு  பெண்களின்  நிர்வாண வீடியோவை பதிவு  செய்து  உள்ளாரா? என்பது  குறித்தும்  போலீசார்  விசாரணை நடத்தி  வருகின்றனர்.

இதுகுறித்து  வெளியான  தகவல்  பெற்றோர்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. லவ்டுடே  திரைப்பட பாணியில்  செல்போனை மாற்றிய  ஆம்புலன்ஸ்  டிரைவர்  போக்சோவில்  கைதாகி சிறை சென்ற இச்சம்பவம்  வாழப்பாடி  பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது  குறித்து  வாழப்பாடி  போலீஸ்  துணை  சூப்பிரண்டு  ஹரிசங்கரி கூறும்போது, “படிக்கும்  மாணவ-மாணவிகள்  செல்போன்  பயன்படுத்துவதை தவிர்க்க  வேண்டும். அப்படி  செல்போன்  பயன்படுத்தும்  மாணவ-மாணவிகள் என்ன  செய்கிறார்கள்  என  பெற்றோர்கள்  மற்றும்  ஆசிரியர்கள்  கண்காணிக்க வேண்டும்.  முகநூல்  மற்றும்  சமூக  ஊடகங்களில்  புகைப்படங்கள்  மற்றும் தொலைபேசி  எண்கள்  பதிவு  செய்வதை  தவிர்க்க  வேண்டும் என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Crime News, Local News, Love, Salem, Tamil News