ஹோம் /நியூஸ் /சேலம் /

ஆபாச படம் எடுத்து மிரட்டல்.. விஷம் அருந்தி சிறுமி தற்கொலை - பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு

ஆபாச படம் எடுத்து மிரட்டல்.. விஷம் அருந்தி சிறுமி தற்கொலை - பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு

சேலம் அரசு மருத்துவமனை

சேலம் அரசு மருத்துவமனை

காவல்துறையினர் பேச்சுவார்த்தையை அடுத்து சிறுமியின் பெற்றோர்கள் உடலை பெற்று கொண்டனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Salem, India

  சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த 17 வயது சிறுமியின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரம்பலூர் மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவை சார்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் 26-ம் தேதி விஷம் குடித்து  சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  இந்த நிலையில்  கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி ராமசாமியின் மகன் மணிகண்டன் உள்ளிட்ட நான்கு பேர் இந்த சிறுமியின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து, கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து, பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், போலீஸ் மூலம் சிறுமியை மீட்ட பின்னரும், தங்களிடம் உள்ள போட்டோ, வீடியோவை வெளியிடுவோம் என தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும், இதனாலேயே சிறுமி தற்கொலை செய்து கொண்டார் எனவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

  இதற்கு ஆதாரமாக சிறுமி தற்கொலை செய்துகொள்ளும் முன் எழுதிய கடிதத்தை வெளியிட்டதோடு, சம்பந்தப்பட்ட மணிகண்டன் உள்ளிட்ட அனைவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

  இதனிடையே அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி, மாரிமுத்து ஆகிய இருவரை பெரம்பலூர் மாவட்டம் கைகளத்தூர் போலீசார் சிறுமியை மிரட்டியது தொடர்பாக கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இதனை அடுத்து பெரம்பலூர் மாவட்ட போலீசார், மணிகண்டன் மற்றும் அவரது தாயார் ராணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

  இதையும் படிங்க: செல்போன் டிஸ்ப்ளே மாற்றுவதில் தகராறு... மதுபோதையில் கடை ஊழியரை தாக்கிய இளைஞர்கள்

  இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பெற்றோர்களோடு பெரம்பலூர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், சேலம் டவுன் உதவி கமிஷனர் வெங்கடேன் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில் சிறுமி உயிரிழந்த வழக்கு சம்பந்தப்பட்ட நான்கு குற்றவாளிகளை போக்சோ சட்டத்தில் கைது செய்து விட்டோம் என்றும், மேலும் சம்பந்தப்பட்ட கைகளத்தூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் , பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு மூலம் உதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

  இதனை அடுத்து உடலை பெற்றுகொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். பிற்பகலில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: POCSO case, Salem