ஹோம் /நியூஸ் /சேலம் /

குவார்ட்டருக்கு ரூ.10 கூடுதலாக வசூல்... அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

குவார்ட்டருக்கு ரூ.10 கூடுதலாக வசூல்... அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மதுபாட்டில்

மதுபாட்டில்

சேலத்தில் மதுபான கடைகளில் ஒரு குவாட்டருக்கு 10 ரூபாய் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது நியூஸ் 18 கள ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. அதேநேரம் பில்லிங் இயந்திரம் பழுதடைந்துவிட்டதாகவும் ஆர்டிஐ கேள்விக்கு அதிர்ச்சி பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Salem, India

  தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 330 டாஸ்மாக் மது விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் பில் கொடுக்காமலும், கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்தே வருகின்றன. தீபாவளி நெருங்கும் வேளையில், சேலத்தின் பல கடைகளில் தற்போது ஒரு குவாட்டருக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. MRP விலையை சுட்டிக்காட்டி வாக்குவாதம் செய்தால், கடை ஊழியர்கள் 10 ரூபாயை திருப்பி தருகின்றனர். சேலத்தின் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் இந்த நிலையே காணப்படுவது நியூஸ் 18 கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

  ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும், பல வியாபாரங்கள் சுறுசுறுப்பாகவும், சில வியாபாரங்கள் மந்தமாகவும் மாறி மாறி நடைபெற்றாலும்,  எப்போதும் டாஸ்மாக் கடைகளின் மது விற்பனை படு ஜோராகவே நடைபெற்று வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இரண்டே நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையானது என்பது குறிப்பிடத் தக்கது.

  இந்த ஆண்டும் டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், ஊழியர்கள் தங்கள் பங்கிற்கு கூடுதல் விலைக்கு மதுவை விற்று வருகின்றனர். இவற்றுக்கு பில்லும் தருவதில்லை. சில கடைகளில் பில் புக்கை தேடி பிடித்து தருவதும், சில கடைகளில் கூட்டமாக இருப்பதால் பில் தருவதில் சிரமம் இருப்பதாக கூறி அனுப்புவதையும் பார்க்க முடிகிறது. சிலர் பில்லெல்லாம் தரமுடியாது கிளம்பு என கோபமாக பேசுவதையும் பார்க்கமுடிகிறது.

  ' isDesktop="true" id="822695" youtubeid="JofLSWUFy2k" category="salem">

  அதே போல்  குவாட்டர் வாங்கும் போது, 160 ரூபாய்க்கு பதிலாக. 170 ரூபாய் என்று சொல்கிறார்கள்.  விளக்கம் கேட்டால் ஐந்து ரூபாய் திருப்பி தருகிறார்கள், மீதி ஐந்து ரூபாயை கேட்டால் எம்ஆர்பி ரேட்டிற்கு எப்படி கொடுக்க முடியும் எனவும், பில் எப்படி கொடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள் விற்பனையாளர்கள்.

  Also see... நடத்தையில் சந்தேகம் : மனைவியை இரும்பு பைப்பால் அடித்து கொன்ற கணவன் கைது!

  மற்றவர்களிடமெல்லாம் பத்து ரூபாய் கூடுதலாக எடுப்பார்கள், என்னிடம் ஐந்து ரூபாய் தான் கூடுதலாக எடுப்பார்கள் என பெருமையாக பேசும் வாடிக்கையாளர்களையும் பார்க்க முடிந்தது என நியூஸ் 18 கள ஆய்வு குழு கூறுகிறது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Salem, Tasmac