ஹோம் /நியூஸ் /சேலம் /

வாழப்பாடி அருகே வங்காநரியை பிடித்துவந்து ஜல்லிக்கட்டு... 4 கிராமங்களுக்கு அபராதம் விதிப்பு!

வாழப்பாடி அருகே வங்காநரியை பிடித்துவந்து ஜல்லிக்கட்டு... 4 கிராமங்களுக்கு அபராதம் விதிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Salem vanganari jallikattu | தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியதால் கிராம மக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem | Salem

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்திய 4 கிராமங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பொங்கல் பண்டிகையின்போது கொட்டவாடி, சின்னம்மநாயக்கன்பாளையம், ரங்கனூர், தமையனூர் ஆகிய கிராமங்களில் வங்காநரியை பிடித்து வந்து ஊர்வலமாக எடுத்து சென்று மாரியம்மன் கோயிலை சுற்றி வழிபாடு நடத்துவது வழக்கம்.

200 ஆண்டுகளாக நடைபெறும் வங்காநரி ஜல்லிக்கட்டுக்கு வனத்துறையினர் தடைவிதித்திருந்தனர். அதனை மீறி கடந்த வாரம் பொங்கல் பண்டிகையின் போது இந்த கிராம மக்கள் வலுக்கட்டாயமாக வங்காநரியை பிடித்து ஊர்வலமாக எடுத்து சென்று வழிபட்டனர். அபராதம் விதிக்கப்படும், சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த பிறகும் ஜல்லிக்கட்டு நடைபெற்றதால் 4 கிராமங்களுக்கு ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Jallikattu, Local News, Salem